பாண்டி. அரசைக் கலைக்க ராமதாஸ் கோரிக்கை
சென்னை:
பாண்டிச்சேரியில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியைக் கலைத்துவிட்டு உடனடியாகத் தேர்தல் அறிவிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர்எல்.கே.அத்வானிக்கு, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் அத்வானிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது:
பாண்டிச்சேரியில் நான் எனது கட்சிக்காரர்களுடன் கொடியேற்று விழாவிற்காகச் சென்று கொண்டிருந்த போது, விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர்எங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து பல வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.
ஆனால் பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் அரசியல் லாபம்சம்பாதிப்பதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதைப் பார்த்துக் கொண்டு ஆளும்கட்சியும் கைகட்டிக் கொண்டு நிற்கிறது.
பாண்டிச்சேரியில் ஜனநாயக ஆட்சி இல்லை. காங்கிரஸ் தலைமையில் ஆளும் கட்சியில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. முதல்வர் சண்முகம் முக்கியஅரசியல் பிரமுகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாரேயொழிய, ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
மேலும், வன்முறைச் சம்பவங்கள் நடந்த காரைக்கால் மற்றும் புதுவைப் பகுதியில் இன்னும் அமைதி திரும்பவில்லை. இன்னும் அங்கு 144 தடையுத்தரவுபோடப்பட்டுள்ளது.
மத்திய அரசு, சிறப்பு குழு ஒன்றை பாண்டிச்சேரிக்கு அனுப்பி தற்போதைய நிலையை அறிய வேண்டும் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் டாக்டர்ராமதாஸ்.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications