ஜெ.வுக்காக இலவச கச்சேரி .. ஏ.ஆர்.ரஹ்மான் சாட்சியம்
சென்னை:
ஜெயலலிதா மீது நடந்துவரும் சொத்து குவிப்பு வழக்கில் இசையமைப்பாளர் ரகுமான்புதன்கிழமையன்று சாட்சியம் அளித்தார்.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீது வருமானத்திற்குஅதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு நடந்து வருகிறது. இதில் அரசு சார்பில்250-க்கும் மேற்பட்டோர் மீது விசாரணை நடந்துள்ளது. இந்நிலையில்இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் புதன்கிழமை சாட்சியம் அளித்தார்.
சாட்சியத்தில், மரியாதை நிமித்தமாகத்தான் சுதாகரன் திருமணத்தில் இசை நிகழ்ச்சிநடத்தினேன். இந்த நிகழ்ச்சிக்கு நான் பணண் வாங்கவில்லை. திருமணத்திற்கு இசைநிகழ்ச்சி நடத்தும்படி என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை.
சுதாகரனின் மணப்பெண் வீட்டார் கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மீதுஎனக்கு மிகுந்த மரியாதையும், அன்பும் உண்டு. சுதாகரன் என்னை நேரில் வந்துதிருமணத்திற்கு அழைக்கவில்லை.
திருமண அழைப்பிதழ் தரும்போது தந்த பட்டுச் சேலைகள், வெள்ளித் தட்டுபோன்றவற்றை ஜெயலலிதா நேரடியாக தரவில்லை. இவற்றை போலீசார் விசாரணைசெய்யும்வரை உபயோகப்படுத்தவில்லை.
வக்கீல்கள் கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு நினைவில்லை, ஞாபகம் இல்லைஎன்றே ரஹ்மான் பதிலளித்தார்.
முன்னதாக நுங்கம்பாக்கத்தில் உள்ள நிதி நிறுவன அதிபர் மோகன்தாஸ் கடந்த மேமாதம் அளித்த சாட்சியத்தில் முதல்வர் ஆவதற்கு முன் ஜெயலலிதா தங்கள்நிறுவனத்தில் 1 லட்சம் வீதம் 3 டெபாசிட்டுகள் செய்திருந்தார். அதற்கான வட்டியாக 1லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படட்து என்றும், டெபாசிட் தொகைதங்களிடம்தான் இருக்கிறது என கூறியிருந்தார்.
அவரிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றபோது ஜெயலலிதாவின் வக்கீல்மோகன்தாஸ் நீதிபதி உத்தரவிட்டும் அந்தப் பணத்தைக் கட்டவில்லை, நீதிமன்றத்தைமதிக்கவில்லை என கூறினார்.
அதற்கு அரசு வக்கீல் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்தான் நீதிமன்றத்தைமதிக்கவில்லை எனக் கூறியதைத் தொடர்ந்து இரு வக்கீல்களும் கடும் வாக்குவாதத்தில்ஈடுபட்டனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications