பண்டார விளை படுகொலை: போலீஸ் மீது மனித உரிமை கமிஷன் புகார்
கொழும்பு:
மத்திய இலங்கையில், பண்டார விளை மறுவாழ்வு முகாமில் 26 தமிழர்கள்கொடூரமாக கொல்லப்பட்டபோது, அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாக போலீஸார் மீது இலங்கை மனித உரிமை கமிஷன் புகார்கூறியுள்ளது.
பண்டாரவிளை படுகொலை குறித்து விசாரணை நடத்தி 18 பக்க அறிக்கையைகமிஷன் தயாரித்துள்ளது. அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அக்டோபர் 25-ம் தேதி, சிங்களக் கும்பல் மறுவாழ்வு முகாமில் வெறியாட்டம்போட்டபோது, அதைத் தடுக்காமல் போலீஸார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.
நூற்றுக்கணக்கான சிங்கள வன்முறைக் கும்பல் முகாமுக்குள் நுழைந்தபோது,அங்கிருந்த போலீஸாரால் அவர்களைத் தடுத்திருக்க முடியும். ஆனால் போலீஸார்அப்படிச் செய்யவில்லை.
வெறிக் கும்பல் கையில் பெரிய ஆயுதங்கள் எதுவும் இல்லை. வெறும் கத்திகள் மற்றும்பிற பொருட்களை மட்டுமே வைத்துக் கொண்டிருந்தனர். எனவே போலீஸாரால்அவர்களை எளிதில் தடுத்திருக்க முடியும். கும்பலைப் பார்த்து போலீஸார்பயப்பட்டதாக கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம், அவர்களிடம்போதுமான ஆயுதங்கள் இருந்தன.
போலீஸார் மீது பெருமளவு தவறு இருந்தாலும் கூட முகாமில் இருந்த தமிழர்களில்ஒருவர் விடுதலைப் புலிகளுடன் நல்ல தொடர்பு வைத்திருந்ததாககவும் கூறப்படுகிறது.இதுகுறித்தும் அரசு விசாரணை நடத்த வேண்டும்.
முகாமி தங்கியிருந்தவர்களிடம் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஆன்டன்ஜேம்ஸ் என்பவர் அடிக்கடி, தாங்கள் விடுவிக்கப்பட வேண்டும், எனவேபோராடுங்கள் என்று கூறி வந்ததாகத் தெரிகிறது. இதுவும் கூட வன்முறைக்குக்காரணமாக இருக்கலாம்.
முகாமில் தங்கியிருந்தவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் அமைப்பைச்சேர்ந்தவர்கள். அனைவருக்கும் 17 முதல் 35 வயதுக்குள் இருக்கும். தாங்களாகவேராணுவத்திடம் சரண் அடைந்தவர்கள். அவர்களுக்கு பல்வேறு மறுவாழ்வுப்பயிற்சிகள் முகாமில் அளிக்கப்பட்டு வந்தது.
நடந்த சம்பவம் குறித்து பாரபட்சமற்ற, நியாயமான, பொதுவான விசாரணைநடத்தப்பட வேண்டும். தவறு செய்த அதிகாரிகள், காவல்துறையினர் மீது கடுமையானநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications