பெங்களூர் தமிழ்ச் சங்கத் தேர்தல்: புதிய அணி வெற்றி
பெங்களூர்:
பெங்களூர் தமிழ்ச்சங்கத்தின் புதிய தலைவராக க.சுப்ரமணியம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அனைத்து பதவிகளையும் இவரது அணியினரே கைப்பற்றியுள்ளனர்.
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்டது பெங்களூர் தமிழ்ச்சங்கம். இதற்கு மூல காரணமாக இருந்தவர் க. சுப்ரமணியம். இதையடுத்துஇரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாகிகள் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர்.
கடந்த முறை சண்முகவேலன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவரது தலைமையின்கீழ் நிர்வாகத்தார் பல முறைகேடுகளில் ஈடுபட்டதாகபுகார் எழுந்தது.
இந்நிலையில் முறைகேடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, துணைத் தலைவர் மீனாட்சி சுந்தரம், செயலாளர் திருச்சி அன்பரசுஆகியோர் பதவி விலகினர். இதையடுத்து சண்முகவேலன் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகினார்.
இதையடுத்து அக்டோபர் 1 ம் தேதி தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடந்தது. சங்கத்தை நிறுவிய க.சுப்ரமணியம் தலைமையில் ஒரு அணியும், பொற்செழியன் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டனர்.
இதில், தலைவராக க. சுப்ரமணியம், துணைத்தலைவராக க. ஜெகந்நாதன், செயலாளராக இராசு.மாறன், பொருளாளராக திருச்சி அன்பரசு, துணைச்செயலாளராக தி.கோ. தாமோதரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட க. சுப்ரமணியம் நிருபர்களிடம் திங்கள்கிழமை கூறுகையில்,
தமிழ், இலக்கிய கலை பண்பாட்டை வளர்ப்பது, தமிழர்-கன்னடர் உறவை வளர்ப்பது ஆகிய நோக்கத்துடன் தமிழ் சங்கத்தை ஆரம்பித்தோம். ஆனால் சிலஆண்டுகளாகவே தமிழ்ச்சங்கம் தனது குறிக்கோளிலிருந்து விலகி விட்டது.
தமிழ்ச்சங்கம் இழந்த பெருமையை மீட்பதும், சங்க வளர்ச்சிக்குப் பாடுபடுதலுமே எங்கள் முன் உள்ள குறிக்கோள். தமிழர் தன்மானத்திற்குப் பங்கம்ஏற்படாதவாறு திருவள்ளுவர் சிலை திறக்க வழிசெய்வோம். விருப்பு, வெறுப்பின்றி அனைத்து தரப்பினரையும் அரவணைத்துச் செல்வோம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications