புடின் வருகை .. கெடுபிடியில்லாத மெளர்யா ஷெரட்டன்
டெல்லி:
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 4 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலான மவுரியா ஷெரட்டான் ஹோட்டலில் அவரும் அவருடன் வந்துள்ள குடும்பத்தினரும், அதிகாரிகளும் தங்கஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எந்த நாட்டு அதிபரோ, அதிகாரிகளோ வந்தால் அந்த ஹோட்டலில்தான் தங்குவார்கள். சில மாதங்களுக்கு முன் இந்தியா வந்தஅமெரிக்க அதிபர் பில் கிளின்டனும் இந்த ஹோட்டலில்தான் தங்கினார்.
மவுரியா ஹோட்டலில் அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் தங்கியதற்கும் இப்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் தங்கியுள்ளதற்கும் நிறைய வேறுபாடுகள்உள்ளன.
குறிப்பாக கிளின்டன் தங்கியபோது இருந்த கெடுபிடிகள் இப்போது இல்லை என்பதை நினைத்து ஹோட்டல் நிர்வாகிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
மவுரியா ஷெரட்டான் ஹோட்டலில் பில் கிளின்டன் தங்கியபோது அந்த ஹோட்டலின் அனைத்து அறைகளையும் அமெரிக்க அதிகாரிகள் ஆக்கிரமித்துக்கொண்டனர்.
ஆனால், இப்போது புடின் பயணத்தில் ஹோட்டலின் இரு தளங்களில் உள்ள அறைகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. வெளியாட்கள் வெளியே சென்றுவர எந்த கட்டுப்பாடுகளும் இல்லை.
கிளின்டன் தங்கியபோது ஹோட்டல் ஊழியர்களுக்கே கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
ஆனால், இந்த முறை அத்தகைய கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் ரஷ்ய அதிகாரிகள் ஹோட்டலில் தங்கி பாதுகாப்புஏற்பாடுகளைக் கவனித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் கிளின்டன் பயணத்தின்போது ஹோட்டலின் முழுமையான பாதுகாப்பையும் அமெரிக்க அதிகாரிகளே கவனித்துக் கொண்டனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
கிளின்டன் பயணத்தின்போது மவுரியா ஹோட்டலைச் சுற்றி ஒரு வாரத்துக்கு முன்பே பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன.
ஆனால், விளாடிமிர் புடின் வந்த திங்களன்று காந்தி ஜெயந்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த விழா எந்தவித பிரச்சினையும்,கட்டுப்பாடுகளும் இல்லாமல் ஹோட்டலில் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பத்திரிக்கையாளர்களும் எளிதில் ஹோட்டலுக்கு வந்து புடினைச் சந்திக்க எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. ஆனால், கிளின்டன் தங்கியிருந்தஅனைத்து நாட்களிலும் ஹோட்டல் பக்கம் வரவே பத்திரிக்கையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications