ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்: இந்தியாவுக்கு ரஷியா ஆதரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக சேரும் முழுத் தகுதியும்இந்தியாவுக்கு உள்ளது என ரஷிய அதிபர் விலாடிமிர் புடின் கூறியுள்ளார்.

சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிப்பது, பொருளாதாரம் மற்றும் பல்வேறு துறைகளில்இரு தரப்பு ஒத்துழைப்புக்கான ஒப்பந்தங்களில் ரஷிய அதிபர் புடினும், இந்தியப்பிரதமர் வாஜ்பாயும் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டனர்.

சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிபபதில் இரு நாடுகளும் சேர்ந்து செயல்படுவது,பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும்அணு சக்தித் துறையில் இரு நாடுகளும் சேர்ந்துசெயல்பட இந்த ஒப்பந்தங்கள் வகை செய்கின்றன.

பிரதமர் வாஜ்பாயுடன் பேச்சு நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் புடின் மற்றும்வாஜ்பாய் பேட்டியளித்தனர். புடின் பேசுகையில், வாஜ்பாயுடன் நடத்திய பேச்சு மூலம்இரு தரப்பினருக்கும் இடையிலான நட்பு நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்ற நம்பிக்கைஏற்பட்டுள்ளது என்றார்.

வைர வர்த்தகம் முதல் இரு நாட்டு மத்திய வங்கிகளின் ஒத்துழைப்பு வரையிலான பலஒப்பந்தங்களில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தங்களின் இறுதியில், ஆண்டுதோறும் இரு நாடுகளின் உயர் மட்டத்தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டுவது, ஐ.நா. சபையில் முக்கிய விஷயங்களில்மிகவும் நெருக்கமாக செயல்படுவது, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில்ஒத்துழைத்து செயல்படுவது என பல முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன.

புடினுடன் பேசுகையில், இந்தியாவுக்கு, பாகிஸ்தான் மற்றும் சீனாவால் பாதுகாப்புஅபாயம் இருப்பதால், வெளிப்படையாகவே அணு ஆயுத சோதனையில் ஈடுபடவேண்டியதாயிற்று என்று வாஜ்பாய் தெரிவித்தார்.

இந்தியாவும், ரஷியாவும் நீண்ட காலத் தோழர்கள். அனைத்து விஷயங்களிலும் இருநாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகின்றன. எதிர்காலத்திலும் இது நீடிக்கும்என்றார் பிரதமர்.

தொடர்ந்து வாஜ்பாய் கூறுகையில், இரு நாடுகளும் இஸ்லாமிய பயங்கரவாதத்தால்பாதிக்கப்பட்டுள்ளன. ரஷியாவுக்கு செச்னியாவும், இந்தியாவுக்கு காஷ்மீரும்பிரச்சினையாக இருந்து வருகின்றன என்றும் வாஜ்பாய் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது ரஷியாவில் சுற்றுப்பயணம் செய்யுமாறு வாஜ்பாய்க்கு, புடின்அழைப்பு விடுத்தார். அதை வாஜ்பாயும் ஏற்றுக் கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+