சித்ரவதை செய்கிறார் கருணாநிதி .. ஜெ. கூறுகிறார்
பரமக்குடி:
என் மீது எத்தனை பழி சுமத்தப்பட்டாலும் அனைத்தையும் தகர்த்து வீழ்த்துவேன் எனஅ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பாக நலிந்தோருக்கு நல திட்ட உதவிகள்வழங்கும் விழா பரமக்குடியில் உள்ள மகாராஷ்டிரா மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.இந்த விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
விழாவில் நலத்திட்ட உதவிகளை அளித்து ஜெயலலிதா பேசுகையில்,
மக்கல் நலனில அக்கறை உள்ள இயக்கம் அ.தி.மு.க.வாகும். மக்களுக்கு கழகத்தின்சார்பில் இலவச சட்ட முகாம் நடத்தப்படுகிறது. ஒரு வருட காலமாக இலவசமருத்த்துவ முகாம்களும் அ.தி.மு.க சார்பில் நடத்தப்படுகிறது. இது மக்கள் நலனில்அ.தி.மு.க.வுக்கு இருக்கும் அக்கறைக்குச் சான்று.
தமிழகத்தில் உள்ள பொது மருத்துவமனைகளிலேயே பெரியது சென்னை பொதுமருத்துவமனை. இதன் கீழ்தளம் சமீபத்தில் இடிந்து விழுந்தது. இதை அமைச்சர்ஆற்காடு வீராசாமி கவனிக்கவில்லை.
தனி நீதிமன்ற தீர்ப்பு என சொல்லி என்னை தினமும் கோர்ட்டு வாசல் ஏற வைத்துசித்ரவதை செய்கிறார் கருணாநிதி. ஆனால் என் மேல் எத்தனை பழி போட்டாலும்அவை அனைத்தையும் தகர்தது எறிவேன்.
அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது ஆனால் தமிழகஅரசு அதை ஆதரவு தெரிவித்துள்ளது. அவர்களுக்கு மக்கள் நலனில் எந்தவிதமானஅக்கறையும் இல்லை.
நான் திரைப்படங்களில் நடித்த பணத்தில்தான் போயஸ் தோட்ட பஙகளாவைக்கட்டினேன். அப்போது எம்.ஜி.ஆர். கட்சியே ஆரம்பிக்கவில்லை. போயஸ் தோட்டவீடு 28 ஆண்டுகளுக்கு முன்பு 1972-ம் ஆண்டு கட்டப்பட்டது. திராட்சைதோட்டத்தையும் திரைப்படத்தில் சம்பாதித்த பணத்தில் 1967-ம் ஆண்டு வாங்கினேன்.
சென்னை முதல் மாமல்லபுரம் வரை பல அடுக்கு மாடிக் கட்டடங்களை கட்டியதாககூறுகிறார் கருணாநிதி. நான் இல்லை என்று கூறினாலும் அதையே மீண்டும் மீண்டும்கூறிவருகிறார்.
வீரப்பனை பிடிக்க காவல் துறை முறையான முயற்சி மேற்கொண்டிருந்தால் அவனைஉயிரோடோ, சுட்டோ பிடித்திருக்க முடியும். என் ஆட்சி காலத்தில் வீரப்பனை பிடிக்கநியமிக்கப்பட்ட அதிரடிப்படை திரும்பப் பெறப்பட்டு விட்டது.
புரட்சித்தலைவர் ஆட்சிஅமைய வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்குவாக்களியுங்கள் என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications