வருவாயில் 4-ல் ஒரு பங்கு கல்விக்கு .. அன்பழகன்
நாமக்கல்:
அரசு வருவாயில் நான்கில் ஒரு பங்கு வருவாய், கல்வித் துறைக்குச்செலவிடப்படுகிறது என மாநில கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறினார்.
நாமக்கல்லில் அரசு பள்ளியில் நடந்த கம்ப்யூட்டர் மையத் துவக்க விழாவில் கலந்துகொண்டு அமைச்சர் அன்பழகன் பேசியதாவது:
கடந்த நான்கு ஆண்டுகளில் தி.மு.க.,அரசு கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம்கொடுத்து வந்துள்ளது. தி.மு.க. ஆட்சி காலத்தில் 40 ஆயிரம் ஆசிரியர்கள்நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசு கல்வித் துறைக்காக பட்ஜெட்டில் அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அரசுகல்வித் துறைக்காக வருவாயில் நான்கில் ஒரு பங்கு செலவிடுகிறது. இந்த வகையில்ஆண்டுக்கு 4 ஆயிரத்து 969 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.
பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு கல்வி உதவித் தொகையாக ஆண்டுக்கு 150 கோடிரூபாயும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 200 கோடி ரூபாயும்செலவிடப்படுகிறது.
பள்ளிகளில் கல்வித் தரம் உயர கற்றலின் இனிமையோடு பாடங்கள் நடத்தப்படவேண்டும். இப்போது நிலவி வரும் சூழ்நிலையை மாற்றி அமைக்க வேண்டும்.கலகலப்பான சூழ்நலையை உருவாக்க வேண்டும். இதுவரை உள்ள பாடத்திட்டங்களை மாணவர்கள் மனப்பாடம் செய்துதான் தேர்வு எழுதி வருகின்றனர்.
இது தவறு இல்லை. ஆனால், பாடத்தை புரிந்து கொண்டு படித்தால், தேர்வு எளிதாகஅமையும். தமிழில் பிழையின்றி எழுத ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்க வேண்டும்என்பதில்லை. பிழைகளை யார் வேண்டுமானாலும் திருத்தி அமைக்கலாம். தமிழைப்பிழையின்றிக் கற்றுக் கொள்ள வேண்டும். ஆங்கிலத்தை 12-ம் வகுப்பு அளவில்எழுதக் கற்றுக் கொள்ளலாம்.
இந்த நூற்றாண்டில், பள்ளிகள்தான் கோயில்களாக விளங்குகின்றன என்பதில் சந்தேகம்இல்லை என்று அமைச்சர் அன்பழகன் பேசினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications