நாங்கள் வளர்ந்து விட்டோம் .. கூறுகிறது புதிய நீதிக் கட்சி
சென்னை:
புதிய நீதிக் கட்சி வெகுவாக வளர்ந்து விட்டது என்று அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.
சென்னையில் வியாழக்கிழமை நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் புதிய நீதிக் கட்சி மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. கட்சி தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே தமிழக அரசியலில் மிகப்பெரியசக்தியாக புதிய நீதிக் கட்சி உருவாகி உள்ளது. சிறிய கிராமத்தில் கூட எங்கள் கட்சிக்கு அமைப்பு உள்ளது.
புதிய நீதிக் கட்சியில் இதுவரை 25 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். அடுத்த மாதத்திற்குள் ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம்.தனித்து தேர்தலில் போட்டியிட்டால் எங்கள் கட்சி 50 இடங்களில் வெற்றி பெறுவோம். 120 தொகுதிகளில் எங்கள் கட்சி பலமாக உள்ளது.
வரும் 18, 19 ம் தேதிகளில் தமிழ்நாட்டில் 200 தொகுதிகளில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடத்த இருக்கிறோம்.
வரும் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் தலைமையில் 3 வது அணியை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறோம். 3 வது அணிக்கு மூப்பனார்வரவில்லையென்றால் புதிய நீதிக் கட்சி தலைமையில் 3 வது அணி அமையும்.
இப்போது எங்களுடைய புதிய நீதிக்கட்சி, முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் தலைமையிலான தமிழ் தேசம் கட்சி, டாக்டர் சேதுராமன் தலைமையிலான மூவேந்தர்முன்னேற்றக் கழகம், காமாட்சி நாயுடு தலைமையிலான திராவிடர், தெலுங்கர் முன்னேற்றக் கழகம் ஆகியவை இணைந்து செயல்பட்டு வருகிறோம்.திருமாவளவனும் எங்கள் அணிக்கு வருவார் என்று எதிர்பார்க்கிறோம்.
நாங்கள் அனைவரும் சேர்ந்து 100 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். தமிழகத்தில் அடுத்து அமையப் போவது கூட்டணி ஆட்சிதான்.
திமுக தலைவர் கருணாநிதியை ஜெயிலில் அடைப்போம் என்று ஜெயலலிதா பேசியதற்குக் கண்டனம் தெரிவிக்கிறோம். ஜெயலலிதா, அரசியல்வாதியாக,ஜனநாயகவாதியாக நடந்து கொள்ள வேண்டும் என்றார் சண்முகம்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications