இந்திர விகாஸ் பத்திரங்களில் ரூ. 7 கோடி மோசடி
சேலம்:
சேலத்தில் போலி இந்திர விகாஸ் பத்திரங்களை விற்பனை செய்து ரூ. 7 கோடி வரைமோசடி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடிக்கு அதிகாரிகளும்உடந்தையாக இருந்தார்கள் எனக் கூறப்படுகிறது.
இந்திய அரசு பொதுமக்களிடையே சிறுசேமிப்பை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களைகடந்த 1984-ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தியது. இதில் தேசிய சேமிப்புப்பத்திரங்கள், மற்றும் இந்திர விகாஸ் பத்திரங்கள் அடங்கும்.
இந்தப் பத்திரங்களில் முதலீடு செய்தால் முதலீடு செய்யப்படும் தொகை 5ஆண்டுகளில் இரட்டிப்பாகும். இந்த கால அளவு பின்னர் 6 ஆண்டுகளாகநீட்டிக்கப்பட்டது.
இந்த சிறு சேமிப்புத் திட்டத்தில் ஏழை எளியவர்கள் முதல் வரிச் சலுகைக்காக பெரியமுதலாளிகள் வரை முதலீடு செய்தனர். இந்த சேமிப்புத் தொகையை வசூல் செய்ய பலதனியார் ஏஜெண்டுகள் கமிஷன் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டத்தில் இந்த கமிஷன் ஏஜெண்டுகள் அதிகாரிகள் உதவியுடன் பல கோடிரூபாய் மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் தாரமங்கலம் என்ற இடத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரன். இவர்சிறுசேமிப்பு ஏஜெண்டான மதியழகன் என்பவரிடம் 20 ஆயிரம் ரூபாய்க்கு இந்திரவிகாஸ் பத்திரம் வாங்கினார். இந்த பத்திரத்தை சிறிது நாட்களுக்கு பின்னர் வங்கிஒன்றில் கொடுத்து கடன் வாங்க முற்பட்டார். அப்போது வங்கி அதிகாரிகள் இந்தப்பத்திரத்தை ஏற்காமல், போலி எனக் கூறி திருப்பி அனுப்பி விட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மகேஷ்வரன் மதியழகனைச் சந்தித்து விளக்கம்கேட்டுள்ளார். அப்போது இந்தப் பத்திரம் பல இடங்களில் கைமாறி வந்துள்ளது தெரியவந்தது. இதில் போலியான தபால் முத்திரை பதிக்கப்பட்டிருப்பதையும் அறிந்தனர்.
இந்த மோசடி குறித்து உடனடியாக தபால் துறை தலைமை அதிகாரிகளுக்குத் தகவல்தெரிவிக்கப்பட்டது. இது போன்ற போலி பத்திரங்கள் சுமார் 7 கோடி ரூபாய்அளவிற்கு மோசடி நடந்திருப்பது பற்றி அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications