ஜடேஜாவைத் தாக்க முயன்ற சிவசேனைத் தொண்டர்கள்
டெல்லி:
மேட்ச் பிக்ஸிங் புகாரில் சி.பி.ஐ. விசாரணை அறிக்கையில் குற்றம் செய்தவராகக்கூறப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜாவை சிவசேனைத் தொண்டர்கள் தாக்கமுயன்றனர். அவரை பத்திரிகை நிருபர்கள் தடுத்துக் காப்பாற்றினர்.
அசாருதீன், மோங்கியா, அஜய் சர்மா, மனோஜ் பிரபாகர் மற்றும் ஜடேஜா ஆகியோர்மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சி.பி.ஐ. விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் புகார் தொடர்பாக விளக்கமளிக்க டெல்லி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்கள்கூட்டத்திற்கு ஜடேஜா ஏற்பாடு செய்திருந்தார். பத்திரிகையாளர் சந்திப்பு நடந்துகொண்டிருந்தபோது, ஏராளமான சிவசேனைத் தொண்டர்கள் உள்ளே நுழைந்துஜடேஜாவைத் தாக்க முயன்றனர். திடீரென நடந்த இந்த சம்பவத்தால் நிலை குலைந்தபத்திரிகையாளர்கள் உடனடியாக ஜடேஜாவைச் சூழ்நது கொண்டு அவரைக்காப்பாற்றினர்.
போலீஸாரும் உடனடியாக வரவழைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் வருவதற்குமுன்பே சிவசேனைத் தொண்டர்களை நிருபர்கள் சமாதானப்படுத்தி வெளியேற்றிவிட்டனர். ஜடேஜாவுக்கு எதிராக குரல் எழுப்பிய சிவசேனைத் தொண்டர்கள், அவர்மீது எறிய அழுகிய முட்டைகளையும் வைத்திருந்தனர்.
பின்னர் ஜடேஜா நிருபர்களிடம் தொடர்ந்து பேசுகையில், என் மீது எந்தத் தவறும்இல்லை. அசாருதின், மோங்கியாவுடன் சேர்ந்து நான் கிரிக்கெட் போட்டிகளை பிக்ஸ்செய்ததாக கூறப்படும் புகாரில் உண்மையில்லை என்றார்.
சி.பி.ஐ. அறிக்கைக்குப் பிறகு தன் மீது தவறில்லை என்று வெளியில் வந்துநிருபர்களுக்கு பேட்டியளித்த முதல் கிரிக்கெட் வீரர் ஜடேஜாதான் என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications