சந்திரனில் கால் பதிக்குமா இந்தியா?
திருப்பதி:
சந்திரனுக்கு விண்கலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்துஆராய உயர் மட்ட அளவிலான விஞ்ஞானிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இந்தியவிண்வெளி ஆய்வுக் கழக (இஸ்ரோ) தலைவர் டாக்டர் கே.கஸ்தூரிரங்கன்கூறியுள்ளார்.
இந்திய அறிவியல் அகாதமி மற்றும் இந்திய விண்வெளிக் கமிஷன் ஆகியவற்றைச்சேர்ந்த விஞ்ஞானிகள் கொண்ட இக்குழு தற்போது சந்திரனுக்கு இந்திய விண் கலத்தைஅனுப்புவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்துஆராய்ந்து வருகிறது என்றும் அவர்தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சந்திரனுக்கு விண்கலம்அனுப்புவது தொடர்பான ஆய்வை மிக வேகமாக இக்குழு மேற்கொண்டு வருகிறது.மத்திய அரசும் இதுதொடர்பாக "சீரியசாக சிந்தித்து வருகிறது.
இதை விட முக்கியமாக, இந்தியாவின் முதலாவது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் அடுத்தஆண்டு பிப்ரவரி 16 மற்றும் 28ஆகிய தேதிகளுக்கிடையே ஏவப்படும். அதற்குத்தேவையான அனைத்துப் பொருட்களும் தற்போது ஆந்திர மாநிலம்ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு வந்து விட்டது. ராக்கெட்டைபொருத்தும் பணி விரைவாக நடந்து வருகிறது.
ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுக்குத் தேவையான கிரையோஜெனிக் என்ஜின் மற்றும் பிறபொருட்களை ரஷியா வழங்கியுள்ளது.
இது முடிந்ததும் 2001-ம் ஆண்டு சோதனை ரீதியிலான செயற்கைக் கோள்களைஇந்தியாவே விண்ணில் செலுத்தும். இதற்கான அனைத்துத் துணை பொருட்கள் மீதானபரிசோதனையும் வெற்றிகரமாக முடிந்து விட்டது.
இதுதவிர, வானிலை ஆராய்ச்சிக்கான செயற்கைக் கோள்களை உருவாக்கும் பணியும்மறுபக்கத்தில் நடந்து வருகிறது. வானிலை ஆராய்ச்சிக்கு மட்டும் இவைபயன்படுத்தப்படும். இதற்கான ஹார்ட்வேர் பொருட்கள், தயாரிக்கப்பட்டுவருகின்றன. அடுத்த ஆண்டு இறுதியில், பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் இந்தசெயற்கைக் கோள்கள் ஏவப்படும்.
இந்தியாவின் அடுத்த செயற்கைக் கோளான இன்சாட்-3சி ஏரியான் ராக்கெட் மூலம்விண்ணில் செலுத்தப்படும். அதற்குத் தேவையான அனைத்துப் பொருட்களும்பெங்களூர் இஸ்ரோ மையத்தில் பொருத்தப்பட்டு வருகின்றன.
இது முடிந்ததும் செயற்கைக் கோள், அடுத்த ஆண்டு மத்தியில், பிரெஞ்ச்கயானாவிலுள்ள கொரு விண்வெளி மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு ஏரியான்மூலம் ஏவப்படும் என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications