நார்வே குழுவினரை அசத்திய விடுதலைப் புலிகள்
கொழும்பு:
வேலுப்பிள்ளை பிரபாகரனைச் சந்திக்க வந்த நார்வேக் குழுவினரை அசத்தலாககவனித்து "தீவிரவாதிகள் என்ற பெயரை பொய்யாக்கியுள்ளனர் விடுதலைப் புலிகள்.
தீராத பிரச்சினையாக நீடித்து வரும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அமைதித் தீர்வுகாண இலங்கை அரசு மற்றும் பிரபாகரனின் வேண்டுகோளின் பேரில் நார்வே நாடுமத்தியஸ்தத்தில் ஈடுபட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து, சந்திரிகா மீண்டும் அதிபராகியுள்ள நிலையில்நார்வே தனது மத்தியஸ்த முயற்சிகளில் மீண்டும் இறங்கியுள்ளது.
டாக்டர் எரிக் சொல்ஹீம் தலைமையிலான மூன்று பேர் கொண்ட நார்வே குழுஇலங்கை வந்துள்ளது. பிரபாகரனைச் சந்திக்க அக்குழுவினர் முயற்சிமேற்கொண்டனர். அனுமதியும் கிடைத்தது. வவுனியா காட்டுக்கு பயணமாயினர்நார்வே குழுவினர்.
வவுனியா காட்டுக்குள் உள்ள மாவள்ளி பகுதிக்கு நார்வே குழு சென்று உலகத்துக்கேஆச்சரியமாக இருக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தது.
காட்டுக்குள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்தப்போகிறோம் என்ற எண்ணத்தில்தான் நார்வே குழுவினர் சென்றிருந்தனர். ஆனால்குழுவினரை புலிகள் உபசரித்த விதத்தைப் பார்த்து அசந்து விட்டனர் நார்வேபிரதிநிதிகள்.
நார்வே குழுவினர் முதலில், கொழும்பு நகரிலிருந்து வவுனியாவுக்கு விமானப்படைஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து நார்வே தூதரக வாகனம்ஒன்று மூன்று பேரையும்,வவுனியா காட்டின் குறிப்பிட்ட பகுதிக்கு அழைத்துச்சென்றது. அங்கு காத்திருந்த சில விடுதலைப் புலிகள் நார்வே குழுவினரை தங்கள்பகுதிக்கு கூட்டிச் சென்றனர்.
நார்வே குழுவினர் முதலில் ஒரு "விருந்தினர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர்.அன்று இரவு அவர்களுக்கு இருவிதமான உணவு காத்திருந்தது. மேற்கத்தியமுறையிலான உணவு அல்லது பாரம்பரியமான தமிழர் உணவு, இதில் எது வேண்டும்என்று கேட்கப்பட்டது. நார்வே குழுவினர் தமிழர் உணவையே தேர்வு செய்தனர்.
சூடான கோழிக் கறி, இறால் மீன்கள் மற்றும் மீன் வகைகள் அவர்களுக்குபரிமாறப்பட்டன. இதுதவிர காய்கறிகளும் கொடுக்கப்பட்டது. அருமையான இரவுச்சாப்பாட்டை சாப்பிட்டு முடித்தனர் நார்வே பிரதிநிதிகள்.
இரவு தூங்குவதற்கு சுத்தமாக வைக்கப்பட்டிருந்த படுக்கைகள் அவர்களைவரவேற்றன. லிலன் விரிப்புகள் விரிக்கப்பட்ட சொகுசு மெத்தைகள் அவர்களுக்குவழங்கப்பட்டன. அறைகளில் நல்ல விளக்கு வசதி இருந்தது. மின்விசிறிகளும்போடப்பட்டிருந்தன. ஜெனரேட்டர்கள் மூலம் இவை இயக்கப்பட்டன.
நவம்பர் 1-ம் தேதி காலையிலும் தமிழர்களின் உணவையே நார்வே குழுவினர்விரும்பிச் சாப்பிட்டனர். சாம்பார், சட்னி, கோழி மற்றும் காய்கறிகளுடன் கூடிய காலைஉணவை முடித்துக் கொண்டனர்.
இரவு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், நார்வேக் குழுவினரைச் சந்தித்தார்.இரண்டு மணி நேரம் அவர்களுடன் பிரபாகரன் பேசினார். சாம்பல் நிறத்திலான சபாரிசூட் அணிந்திருந்தார் பிரபாகரன். சுத்தமான தமிழில் அவர் பேச, அதை ஒருவிடுதலைப் புலி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நார்வே பிரதிநிதிகளுக்குவிளக்கினார்.
கடந்த ஐந்து ஆண்டுளாக எந்த வெளிநாட்டுப் பிரதிநியுடனும் பிரபாகரன் பேச்சுநடத்தியதில்லை. இப்போதுதான் முதல் முறையாக நார்வே குழுவினருடன்பேசியுள்ளார். இதுவே பெரிய வெற்றி என்று டாக்டர் எரிக் கூறியுள்ளார். மேலும்,நார்வே குழுவினரை விடுதலைப் புலிகள் உபசரித்த விதம், தாங்கள் இலக்கே இல்லாதபோராளிகள் மட்டுமல்ல, குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே போராடுகிறோம்என்பதையும் நார்வே குழுவினருக்கு விளங்க வைத்திருக்கும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications