கோவில்களை அரசிடமிருந்து மீட்க பா.ஜ.க. திட்டம்
சென்னை:
அரசின் பிடியிலிருந்து கோவில்களை விடுவித்து சுதந்திரமான அமைப்பிடம்ஒப்படைக்கப்பட வேண்டும் என தமிழக பாரதிய ஜனதாக் கட்சி கூறியுள்ளது.
பா.ஜ.க.வின் மாநில நிர்வாகிகள், அணித் தலைவர்கள் மற்றும் கோட்டப்பொறுப்பாளர்கள் கூட்டம் பா.ஜ.க. தலைமை அலுவலகதிதல் வெள்ளிக்கிழமைநடந்தது.
இதில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பொதுச்செயலாளர் இல.கணேசன்உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வரவிருக்கும் தேர்தல், கட்சிப் பணிகள், ஆலய நிர்வாகத்தை தமிழக அரசிடமிருந்துமீட்பது உட்பட பல பிரச்னைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமையும் தொடர்ந்து நடைபெறுகிறது. சனிக்கிழமைநடைபெறவிருக்கும் கூட்த்தில் பா.ஜ.க. தலைவர் பங்காரு லட்சுமணன் கலநதுகொள்கிறார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தமிழக்தில் இந்துக் கோயில்கள் நல்ல முறையில் பராமரிக்கப்பட வேண்டுமானால்அவைகள் அரசின் பிடியிலிருந்து விடுவிக்கப்ட்டு சுதந்திரமான அமைப்புகளிடம்ஒப்படைக்கப்பட வேண்டும் என தமிழகத்தைச் சேர்ந்த 6 இந்து அமைப்புகள்கூறியுள்ளன.
இந்து அமைப்புகளின் கோரிக்கைக்கு நியாயமான காரணம் இருக்கிறது. முந்தையஅரசை விட இந்த அரசில் கோயில்களின் பராமரிப்பு மேம்பட்டிருந்தாலும் முழுமைபெறவில்லை. எனவே இந்து அமைப்புகளின் கூட்டு கோரிக்கையை பா.ஜ.க. ஏற்கிறது.
வரும் 6-ம் தேதி முதல் டிசம்பர் 2-ம் தேதிவரை தமிழகத்தில நடைபெற இருக்கும்நல்லாட்சிக்கு ஆதரவு தாருங்கள் என கோரி நடைபெற இருக்கும் தாமரையாத்திரையின் போது யாத்திரைக்கு தலைமை ஏற்கும் தலைவர்கள் தமிழகத்திலுள்ளமுக்கியக் கோவில்களுக்குச் சென்று கோவில்களை அரசிடமிருந்து மீட்பது குறித்துமக்கள் கருத்தை கேட்டு அறிவார்கள்.
அந்த கருத்துக்களை ஆய்வு செய்தபின் அரசுக்கு பரிந்துரை செய்ய குழு ஒன்றுஅமைக்கப்படும். வரவிருக்கும் சட்டசபைத் தேர்தல் அறிக்கையில் இந்த அம்சம்நிச்சயமாக இடம் பெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications