வாஷிங்டன் செல்கிறார் அராபத்
வாஷிங்டன்:
இஸ்ரேலுடனான மோதல் குறித்து பேசுவதற்காக பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத்நவம்பர் 9-ம் தேதி அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்கு செல்கிறார்.
அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனுடன் அவர் பேச்சு நடத்துவார். அமெரிக்கடி.வியான சி.என்.என்.னுக்கு அளித்த பேட்டியில், மேற்காசிய பிரச்சினை தொடர்பானபேச்சுவார்த்தையில், பாலஸ்தீனர்கள் சார்பில் கலந்து கொள்ளும் முக்கியப்பிரதிநிதியான சயீப் எரிகாத் இத்தகவலைத் தெரிவித்தார்.
இதற்கிடையே, கிளிண்டனுடன் பேச்சு நடத்துவதற்காக தானும் அமெரிக்காசெல்லவுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் எஹூத் பாரக்கும் அறிவித்துள்ளார். இருப்பினும்,மூன்று தரப்புக்கிடையிலான பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு ஏதும் இல்லை என்றுகூறப்படுகிறது.
பாரக் கூறுகையில், இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படும்என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் உள்ளது. மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி நிலவபாலஸ்தீன தலைவர் அராபத் ஒத்துழைக்க வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications