புலிகள் நீட்டுவது நேசக்கரமா, அபாய அறிவிப்பா?
கொழும்பு:
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், நார்வே தூதுக் குழுவினர் சந்திப்பையடுத்துஎழுந்துள்ள புதிய சூழ்நிலையில், விடுதலைப் புலிகளுடன் சண்யிைல் ஈடுபட்டுள்ளராணுவம் மிகவும் கவனமுடன் இருக்குமாறு ராணுவ தளபதிகளுக்கு இலங்கை ராணுவதலைமையகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரபாகரன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அவரைச்சந்தித்து விட்டுத் திரும்பியுள்ள நார்வே தூதுக் குழுத் தலைவர் எரிக் சொல்ஹீன்தெரிவித்துள்ள நிலையில், ராணுவமும் அதற்கேற்ப தன்னை உஷார்படுத்திக் கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது.
விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உக்கிரமான தாக்குதல் குறையலாம் என்றுராணுவமும், இலங்கை அரசும் எதிர்பார்க்கின்றன. இருப்பினும், ராணுவம் தனதுவழக்கமான நடவடிக்கையில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை.உத்திகளையும் மாற்றிக் கொள்ளவில்லை.
விடுதலைப் புலிகள் எப்போதெல்லாம் இறங்கி வந்திருக்கிறார்களோ அதற்குப் பிறகுமிகப் பெரிய தாக்குதலில் இறங்கியிருக்கிறார்கள் என்பதை ராணுவம் மேற்கோள்காட்டுகிறது. எனவே, நார்வே தூதுக் குழுவுடன் பேச்சு நடத்தியிருக்கும் நிலையில்அடுத்து அவர்களது நடவடிக்கை எதுவாக இருக்கும் என்பதை கணிப்பது மிகவும்கடினம் என்று பாதுகாப்புத் துறையை மேற்கோள் காட்டி சண்டே டைம்ஸ் செய்திவெளியிட்டுள்ளது.
ராணுவ செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் சனத் கருணாரத்னே கூறுகையில்,விடுதலைப் புலிகளுடன் நேரடி மோதலில் ஈடுபட்டுள்ள ராணுவத் தளபதிகள் தங்களதுவழக்கமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். திட்டமிட்டபடி அவர்கள்செயல்பட்டுக் கொண்டுள்ளனர். அரசியல் ரீதியில் ஏதாவது மாற்றம் இருக்கலாம்.ஆனால் ராணுவ நடவடிக்கையில் இதுவரை மாற்றமில்லை என்றார் அவர்.
அதேசமயம், அமைதிப் பேச்சில் ஒருபக்கம் ஈடுபட்டிருந்தாலும் கூட, தொடர்ந்துதங்களது தாக்குதல்களை விடுதலைப் புலிகள் மேற்கொண்டுதான் வருகின்றனர்.திருகோணமலையில் சனிக்கிழமை இரவு, கடற்படைக் கப்பல் மீது புலிகளின்தற்கொலைப் படையினர் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதல் இதற்கு நல்லஉதாரணம்.
புலிகளின் நடவடிக்கை குறித்து மிகவும் எச்சரிக்கையுடனேயே இலங்கை அரசுஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications