திமுகவைக் கண்டித்து களத்தில் குதிக்கிறது அதிமுக
சென்னை:
ஜெயலலிதாவைக் கண்டித்து திமுகவினர் நடத்தி வரும் போராட்டத்தை முறியடிக்கும்வகையில், அதிமுக சார்பில் பஞ்சாயத்து, நகர அளவில் எதிர் போராட்டம்நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியுள்ளதாவது:
அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் பேசப்பட்டது குறித்து தவறான பிரசாரத்தை திமுகமேற்கொண்டு வருகிறது. கருணாநிதி குறித்து நான் தவறாகப் பேசியதாக திமுகவினர்மக்கள் மத்தியில் பொய்ப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து மக்களிடம் விளக்கஅதிமுக முடிவு செய்துள்ளது. நவம்பர் 11ம் தேதி முதல் 16-ம் தேதி வரை இந்த விளக்ககூட்டம் தமிழகம் முழுவதிலும் உள்ள பஞ்சாயத்துக்கள், நகரங்களில் நடைபெறும்.
கட்சியின் அனைத்துப் பிரிவினரும் இந்த அமைதியான வழியில் அமைந்தபோராட்டத்தை வெற்றிகரமாக நடத்திட ஒத்துழைக்க வேண்டும்.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மக்களிடம் தெளிவானமுறையில் விளக்கிட வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக பொதுக்குழுக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசுகையில், அதிமுக ஆட்சிக்குவந்தால், முதல்வர் கருணாநிதி தனது மீதமுள்ள வாழ்நாளை சிறையில்தான் கழிக்கநேரிடும் என்று பேசினார். இதையடுத்து திமுக தரப்பில் ஜெயலலிதாவைக் கண்டித்துமாநிலம் முழுவதும் திமுகவினர் கண்டனப் பேரணிகளை நடத்தி வருகின்றனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications