"அதிமுகவினர் நம்பிக்கை இழந்து விட்டார்கள்
சென்னை:
ஜெயலலிதா தேர்தலில் நிற்க முடியாது, அதிமுக ஆட்சிக்கு வராது என்ற நிலைநிலவுவதால் அதிமுக தொண்டர்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்று திமுகபொதுச் செயலாளரும், கல்வி அமைச்சருமான அன்பழகன் கூறியுள்ளார்.
ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் கருணாநிதியை ஆயுள் காலம் முழுவதும் சிறையில்அடைப்பேன் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசியதை கண்டித்துதி.மு.க. சார்பில் கண்டனக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னைதுறைமுகத்தில் நடந்த கண்டனக் கூட்டத்தில் அமைச்சர் அன்பழகன் பேசினார்.
அவர் பேசுகையில், நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி இறங்கும் ஜெயலலிதா,எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிடலாம் என்ற எண்ணத்தில் கருணாநிதியை அவர்உயிரோடு இருக்கும்வரை சிறையில் அடைப்பேன் என்றும், தி.மு.க.வை அழிப்பேன்என்றும் ஆணவத்தோடு பேசியிருக்கிறார்.
அவர் ஆட்சிக்கு வந்து விடுவாரோ என்ற கவலை எங்களுக்கு இல்லை. தமிழக மக்கள்அந்த அளவுக்கு ஏமாளிகள் அல்ல. அப்படியே அவர் ஒருவேளை ஆட்சிக்குவந்துவிட்டாலும் கருணாநிதியை சிறையில் வைக்க முடியாது. குற்றத்தைநீதிமன்றத்தில் நிரூபித்தால் தான் யாருக்கும் தண்டனை வழங்க முடியும். யாரும்யாரையும் சிறையில் அடைத்துவிட முடியாது.
ஜெயலலிதாவால் இனி தேர்தலில் நிற்க முடியாது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வராது என்றநம்பிக்கை இழந்த நிலையில் அ.தி.மு.க.வி.னர் இருக்கிறார்கள். அவர்களை உசுப்பிவிடுவதற்காக ஜெயலலிதா இப்படி பேசி வருகிறார். தனக்கு விதிக்கப்பட்ட சிறைதண்டனையை திசை திருபபுவதற்காக ஏதேதோ கூறுகிறார்.
கூச்சப்படாமல் எந்த மோசடியும் செய்யத் துணிந்தவர் ஜெயலலிதா. மொத்தம் 60ரூபாய் சம்பளம் வாங்கியவருக்கு 2 ஜவுளிக் கடை அளவுக்கு பட்டுப் புடவைகள்,பாட்டா ஷோ ரூம் அளவுக்கு செருப்புகள் எப்படி வந்தன. கருணாநிதியை சிறையில்தள்ளுவேன் என்று கூற இந்த கிரிமினல் பேர்வழிக்கு என்ன தகுதி இருக்கிறது?.
எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிடலாம் என்ற கனவை வரவழைத்துக் கொண்டுஜெயலலிதா இப்படி பேசுகிறார். எனவே மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும்என்றார் அன்பழகன்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications