தமிழக சட்டசபை இன்று கூடுகிறது
சென்னை:
தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்குகிறது.
திங்கள்கிழமை காலை 9.30 மணிக்குத் தொடங்கும் கூட்டத்தொடரில் முதலில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கும், மறைந்த மத்தியமின்சாரத் துறை அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம், தமிழக வருவாய்த்துறை அமைச்சர் நாஞ்சில் மனோகரன், எம்.ஜி.ஆர்.அதிமுக உறுப்பினர்அன்பரசன், பார்வர்டு பிளாக் உறுப்பின் வல்லரசு ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும்.
இந்த இரங்கல் தீர்மானத்துடன் சபை ஒத்தி வைக்கப்படும். இதன்பின் சபாநாயகர் பிடிஆர். பழனிவேல்ராஜன் தலைமையில் சபையின் ஆய்வுக்குழு கமிட்டி கூடிவிவாதிக்கும். அக்குழு எத்தனை நாட்கள் கூட்டத்தொடரை நடத்த வேண்டும்? எந்தெந்த விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்பது குறித்துஆலோசித்து முடிவெடுக்கும்.
சுமார் ஒரு வாரம் நடக்கும் இக்கூட்டத்தொடரில் மின்வாரிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். கடந்த 6 மாதங்களில் பிறப்பிக்கப்பட்ட 7 அவசரசட்டங்களுக்குப் பதிலாக சட்ட மசோதாக்களும் தாக்கல் செய்யப்படும்.
இந்தக் கூட்டத்தொடரில் பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வு, மதுரையில் மு.க. அழகிரிக்கு ஆதரவாக பஸ்கள் எரிப்புச் சம்பவம், கோவையில்அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியும், திமுக உறுப்பினர் சிடி தண்டாயுத பாணியும் ஒருவருக்கொருவர் சட்டையைக் கிழித்துக் கொண்டு மோதியது உள்ளிட்டபல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
எதிர்க்கட்சியினர் சட்டசபையில் ஒருபுறம் சட்டசபையில் புயலைக் கிளப்பத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஆளும் திமுக, கருணாநிதியை ஜெயிலில்அடைப்பேன் என்று ஜெயலலிதா கூறியதையும், டான்சி நிலப் பேர ஊழல் வழக்கையும், பெரிதாக விவாதிக்கும்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் வரவுள்ளதால், இக்கூட்டத்தொடரில் இருதரப்பிலும் கருத்து மோதல்கள் பலமாக இருக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications