காங். கமிட்டி உறுப்பினர்களாக 531 பேர் தேர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக மாநிலத் தலைவர் இளங்கோவன், முன்னாள்அமைச்சர்கள் பிரபு உள்ளிட்ட 531 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் 12-ம் தேதி நடைபெறுகிறது. சோனியாகாந்தியும், ஜிதேந்திர பிரசாத்தும் மோதுகின்றனர். இந்த தேர்தலில் மாநில காங்கிரஸ்கமிட்டி உறுப்பினர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோர்வாக்களிக்க வேண்டும்.

அதற்காக பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.தங்கபாலு, திண்டிவன ம் ராமமூர்த்தி, குமரிஅனந்தன் ஆகியோரது ஆதரவாளர்கள்இப்பட்டியலில் இடம் பெற வேண்டும் என்று விரும்பினர். அதற்கான முயற்சிகளில்இத் தலைவர்கள் ஈடுபட்டனர்.

ஆனால், இவர்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு தனது ஆதரவாளர்கள் மற்றும் தனக்குஅணுசரணையாக உள்ள அருணாசலம், பிரபு ஆதரவாளர்களை மட்டும் இடம் பெறச்செய்துள்ளார் இளங்கோவன். இதனால் தமிழக காங்கிரஸ் கட்சியில் பெரும் குழப்பம்ஏற்பட்டுள்ளது.

கோஷ்டித் தலைவர்கள் எல்லாம் தாங்கள் புறக்கணிக்கப்பட்ட விஷயத்தைமேலிடத்தில் புகார் செய்ய டெல்லி விரைந்துள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர்அளித்துள்ள பட்டியலை அங்கீகரிக்கக்கூடாது என்று இவர்கள் டெல்லியில் கூட்டாகமுறியிட்டுள்ளனர்.

இதற்கிடையில் இளங்கோவன் தயாரித்து அனுப்பியுள்ள பட்டியலில் இளங்கோவன்,அருணாசலம், பிரபு, அன்பரசு அவரது மனைவி கமலா, முன்னாள் தலைவர்எம்.பி.சுப்ரமணியம், தண்டாயுதபாணி, ஜோதி வெங்கடாசலம் உள்ளிட்ட 531 பேர்உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+