நள்ளிரவுக் கொள்ளை .. நடுக்கத்தில் ஈரோடு
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் அடுத்தடுத்து நடந்த கொள்ளையால் பொதுமக்கள்அச்சமடைந்துள்ளனர். போலீசார் நள்ளிரவு ரோந்துப் பணியைத் தீவிரமாக்கியுள்ளனர்.
ஈரோடு மாவட்டம், தில்லை நகரில் குடியிருந்து வருபவர் அனில்குமார் (30). இவர்நகை வியாபாரம் செய்து வருகிறார். நள்ளிரவில் இவர் குடும்பத்துடன் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு கொள்ளைக் கும்பல், வீட்டின் மாடியில் உள்ளஜன்னல் வழியாக வீட்டிற்குள் இறங்கியது.
இந்த கும்பல், நகை மற்றும் பணம் வைக்கப்பட்டிருக்கும் அறைக்குச் சென்று பீரோவைஉடைத்தது. அதில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பிஓடிவிட்டது. இதில் சுமார் 1.5 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் 40 ஆயிரம்ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து அனில்குமார் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
இதே போன்று சிவகிரி அருகே உள்ள காட்டைப் புதூரைச் சேர்ந்தவர் துரைசாமி (58).இவர் தனது மனைவி மற்றும் மருமகள் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.அப்போது அடையாளம் தெரியாத ஒரு கும்பல் இவர்களது வீட்டில் புகுந்தது.
சத்தம் கேட்டு எழுந்த துரைசாமி மற்றும் குழந்தைகளைக் கட்டிப் போட்டது. பின்னர்அங்கிருந்த 18 பவுன் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றைஎடுத்துக் கொண்டு தப்பி விட்டது.
இது போன்று அடிக்கடி நடந்து வரும் கொள்ளையால் பொதுமக்கள்அச்சமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய போலீசார்வழக்கம்போல உத்தரவிட்டுள்ளனர். அதே சமயம், இனி கொள்ளை சம்பவங்கள்நடக்காமல் தடுக்க இரவு நேர ரோந்துப் பணியைப் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications