தாயிடமே பணம் திருடிய "தங்க மகன்
கோவை:
தாயிடமே ஒரு லட்ச ரூபாய் திருடிய மகனைப் போலீசார் தேடி வருகின்றனர்.
தாயும், மகனுமானாலும் வாயும் வயிறும் வேறு தானே? இதை நிரூபிக்கும் வகையில்ஒரு சம்பவம் கோவை அருகே நிகழ்ந்துள்ளது.
கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் லட்சுமி (45). இவர் தொழிலதிபராக உள்ளார்.பஞ்சு மற்றும் நூால்களுக்கு ஏஜெண்டாக செயல்பட்டு வருகிறார். இவரது மகன்சரவணன் (25). சொந்தமாக லாரி சர்வீஸ் நடத்திவருகிறார்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஈரோட்டைச் சேர்ந்த பாண்டித் துரைஎன்பவர் லட்சுமியிடம் கடனாக 5. 2லட்ச ரூபாய் மதிப்புள்ள பருத்தி மற்றும் நூல்கள்பெற்றார். ஆனால், இதற்கான தொகையைத் திருப்பிக் கொடுக்கவில்லை.
இந்த தொகையைக் கோரி லட்சுமி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இதில் வெற்றிபெற்றார். இவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பில் 3 லட்சம் மதிப்புள்ள நூலும், ஒரு லட்சரூபாய் ரொக்கமும், ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள செக்கும் கிடைத்தது.
இதனை ஈரோடு சென்று பெற்றுக் கொண்ட லட்சுமி, அருகில் கொமாரபாளையத்தில்பிரசவத்திற்காகச் சென்றுள்ள மருமகளைப் பார்க்கச் சென்றார். அங்கு தங்கிய லட்சுமி,குழந்தையையும், மருமகளையும் பார்த்து விட்டு கோவை திரும்ப எண்ணினார்.ஆனால் இரவு நேரமாகிவிட்டதாலும் கையில் பணமும் செக்கும் இருந்ததாலும்காலையில் செல்ல எண்ணி தங்கி விட்டார்.
காலையில் அவர் கண் விழித்துப் பார்த்தபோது ஒரு லட்ச ரூபாய் பணம் காணமல்போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். அதே சமயம், அவரது மகன் சரவணனும்இல்லை.
எனவே, சந்தேகமடைந்த அவர், தனது மகன் மீது போலீசில் புகார் கொடுத்தார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications