ஜாதிக் கட்சிகளுடன் யாரும் சேராதீர்கள் .. இந்து முன்னணி
கோவை:
தேச ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு ஜாதிக் கட்சிகளுடன் எந்த ஒரு அரசியல்கட்சியும் கூட்டணி வைத்துக் கொள்ளக் கூடாது என இந்து முன்னணி கூறியுள்ளது.
கோவையில் இந்து முன்னணியின் மாநில செயற்குழுக் கூட்டம் நடந்தது. இந்தக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ரமேஷ்பாபு தலைமை வகித்தார்.
மாநிலத் தலைவர் துரைசங்கர், பொதுச் செயலர் ஜெயராஜ், நிறுவன அமைப்பாளர்ராமகோபாலன், அமைப்பாளர் வீரபாகு ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்து விரோதப் போக்கை வலியுறுத்தி ஒவ்வொருவீடாகச் சென்று துண்டுப் பிரசுரம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளில் இந்துமுன்னணி விரைவில் ஈடுபடவுள்ளது.
சமுதாயத்தில் பிரிவினையை உண்டாக்கி அவற்றில் அரசியல் ஆதாயம் தேட ஜாதிக்கட்சிகள் முனைந்து வருகின்றன. இதனைத் தடுத்து நிறுத்தவும், சமுதாய, தேசஒற்றுமையைக் கருத்தில் கொண்டு ஜாதிக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பதை அரசியல்கட்சிகள் அறவே தவிர்க்க வேண்டும்.
இந்து சமுதாயத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், திருப்பரங்குன்றம்மலை உச்சியில் இந்து அறநிலையத் துறை சார்பில், பெரிய கார்த்திகை தினத்தன்றுதீபம் ஏற்ற வேண்டும்.
ராமநாதபுரத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இந்து முன்னணித் தலைவர்ராமுவின் குடும்பத்தினருக்கு அரசு 5 லட்ச ரூபாய் நிவாரண நிதி அளிக்க வேண்டும்.
திருச்செந்தூரில் நாழிக் கிணறு எனப்படும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பகுதியை மூடி,அங்கு விடுதி கட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விடுதி கட்டும்ஏற்பாட்டை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். இத்திட்டத்திற்கு அரசு தடைவிதிக்க வேண்டும்.
அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொது இடங்களிலும் ஒலி பெருக்கிஉபயோகிப்பதைத் தடை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவை அரசு அமல்படுத்த வேண்டும். அவ்வாறு அமல்படுத்தப்படாவிட்டால்இது குறித்து இந்து முன்னணி நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும்.
பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களாக பாதிரியர்களை நியமிக்கக் கூடாதுபோன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications