என்னை வேவு பார்க்கிறார் கருணாநிதி .. கூறுகிறார் ஜெ.
மதுரை:
தமிழக முதல்வர் கருணாநிதி மாநிலத்தில் நல்லாட்சி நடத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடாமல் எனது ஒவ்வொரு அசைவிலும் குற்றம் கண்டுபிடித்துக்கொண்டும், வேவு பார்த்துக் கொண்டும் இருக்கிறார் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
திண்டுக்கல்லில் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் வெண்கல முழு உருவச் சிலையைத் திறந்து வைத்து அவர் பேசியதாவது:
தஞ்சாவூரில் உள்ள ஆலங்குடி கோவிலுக்குப் பிரார்த்தனை செய்வதற்காகச் சென்றேன். இது என் தனிப்பட்ட விஷயம். அரசியலுக்கு அப்பாற்பட்டது.ஆனால், இந்த விஷயத்தை பூதாகரமாக்கி, இதற்கு அரசியல் சாயம் பூச நினைக்கிறார் கருணாநிதி.
தமிழக அரசுப் பேருந்துகளில் எழுதி வைக்கப்பட்டிருந்த திருக்குறளை அகற்றிவிட்டு கருணாநிதி, தனது பொன்மொழிகளை எழுதி வைத்துள்ளார். தமிழகத்தில்மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், அரசுப் பேருந்துகளில் திருக்குறள் எழுதி வைக்கப்படும் என்றார் ஜெயலலிதா.
முன்னதாக, திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆரின் முழு உருவச் சிலையை ஜெயலலிதா திறந்து வைத்தார். இதையொட்டி அதிமுக சார்பில் பேரணி நடத்தப்பட்டது.நிகழ்ச்சியில், அதிமுக சார்பில் 572 பேருக்கு அயர்ன் பாக்ஸ் மற்றும் ஆடைகள் வழங்கப்பட்டன.
உடல் ஊனமுற்றோர் 52 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் வழங்கப்பட்டன. எம்.ஜி.ஆர்.சிலை திறப்பு விழாவில் அதிமுக அவைத்தலைவர் காளிமுத்து,பொருளாளர் சீனிவாசன், எம்.பி.தினகரன் மற்றும் சசிகலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications