மதுரையில் விடுதலை சிறுத்தைகள் மீது தடியடி

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரையில் மாநகராட்சி ஊழியர்கள் சாலையோரக் கடைகளை அகற்றியதை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள்போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் லேசான தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர்.

இதுகுறித்துப் போலீஸார் கூறுகையில், மதுரை தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் இருந்த கடைகளை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தும் போது,விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநகராட்சி இன்ஸ்பெக்டரைத் தாக்கினர். பின்னர் பஸ்கள் மீது கல் வீசினர்.

இச்சம்பவத்தில் இரண்டு வாகனங்கள் லேசாக சேதமடைந்தன. அவர்கள் போக்குவரத்துக்கு இடையூறு செய்ய முயன்றபோது, போலீஸார் லேசான தடியடிநடத்தி அக்கும்பலைக் கலைத்து விட்டனர் என்றனர்.

முன்னதாக, தேசிய நெடுஞ்சாலையில், கடைகளை அப்புறப்படுத்த விடாமல் மாநகராட்சி ஊழியர்களை தடுத்தது தொடர்பாக, பாட்டாளி மக்கள் கட்சியைச்சேர்ந்த 21 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் 2 பேர் பெண்கள். இச்சம்பவத்தால் மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+