தர்மபுரியில் நக்சல்கள் கரம் வலுப்படுகிறது
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில், தலைமறைவாக உள்ள நக்சல்கள் ஒன்று சேர்ந்து நக்சல் இயக்கத்தலைவர் ரவீந்திரனுக்குச் சிலை அமைக்க முயற்சித்து வருகின்றனர். இதற்கான வசூல்வேட்டையில் இவர்கள் இறங்கியுள்ளனர்.
தர்மபுரியில் நக்சல்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தஆதிக்கத்தை தடுக்கவும், அவர்களை ஒடுக்கவும் அரசு முயற்சி மேற்கொண்டுவருகிறது. கடந்த ஆண்டு இந்த நக்சல் இயக்கத்தில் பிளவு ஏற்பட்டது.
நக்சல் இயக்கத்தைச் சேர்ந்த பலர் விடுதலைச் சிறுத்தை இயக்கத்தில் சேர்ந்தனர்.இதனால் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த கோஷ்டி மோதலில்மாராண்டஹள்ளி என்ற இடத்தில் நக்சல் இயக்கத்தைச் சேர்ந்த ரவீந்திரன் கொலைசெய்யப்பட்டார்.
ரவீந்திரன் கொலை செய்யப்பட்டு ஓராண்டு முடிவடைந்து விட்டது. இதையடுத்துரவீந்திரனுக்கு சிலை வைப்பது குறித்து தலைமறைவாக உள்ள நக்சல்கள் முயற்சிமேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே தர்மபுரி மாவட்டம், பூதிப்பூரில் நக்சல்இயக்கத்தின் ரவீந்திரனுக்கு நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது.
நக்சல் இயக்கத்திற்கு இடையே ஏற்பட்ட மோதலின்போது போலீசார் பலரைக் கைதுசெய்தனர். இதில் தற்போது இந்த இயக்கத்தின் தலைவனாகச் செயல்பட்டு வரும்பாலன் என்பவரும் உள்ளார். இதில் கைதான 5-க்கும் மேற்பட்டோர் ஜாமீனில்வெளியே வந்து தலைமறைவாகி விட்டனர்.
இந்நிலையில் இவர்களில் முக்கியப் பிரமுகர்களான பாலன், இளங்கோவன், காளிதாஸ்ஆகியோர் பூதிப்பூரில் நடமாடி வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இவர்கள்பகலிலேயே ரவீந்திரனுக்கு அமைக்கப்பட்டுள்ள நினைவு ஸ்தூபியை வலம்வந்துள்ளனர். இந்த ஸ்தூபியைப் பார்த்து விட்டு சாவகாசமாக டீ குடித்து விட்டுச்சென்றுள்ளனர்.
மேலும், ரவீந்திரன் இறந்து ஓராண்டு முடிந்த நிலையில் அவரது நினைவாக தர்மபுரிமாவட்டத்தின் முக்கிய இடத்தில் சிலை ஒன்று வைக்கவும் முடிவு செய்துள்ளனர்.இதற்கான நிதியை பலரிடம் மிரட்டி வசூல் செய்து வருகின்றனர். இந்த வசூல் பற்றிகேள்விப்பட்ட போலீசார் உஷாராடைந்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications