போலீஸ்காரரிடமே கைவரிசை காட்டிய போலீஸ்காரர்
சென்னை:
போலீஸ்காரர் ஒருவரின் சூட்கேசை இன்னொரு போலீஸ்காரர் திருடிக் கொண்டுஓடியபோது மற்ற போலீஸ்காரர் மடக்கிப் பிடித்து போலீஸ் நிலையத்தில்ஒப்படைத்தனர்.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த இந்த சம்பவம் போலீஸ்வட்டாரத்தையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போலீஸ்கான்ஸ்டபிளாக இருப்பவர் கருணாமூர்த்தி. ஏற்கனவே தவறு செய்து ஓராண்டுதற்காலிக பணி நீக்கத்திற்கு பின்னர் இப்போது தான் பணியில் சேர்ந்துள்ளார்.
இவரும் மற்ற போலீஸ்காரர்களும் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில்தங்கியிருந்தனர். திங்கள் கிழமை அதிகாலை 3 மணியளவில் அறையில் மற்றவர்கள்எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தனர். கண் விழித்த கருணாமூர்த்தி அறையில் இருந்தசூட்கேஸ் மீது ஆசை கொண்டார். அது அருணகிரிநாதன் என்ற போலீஸ்காரருக்குசொந்தமானது.
விடிந்தும் விடியாத அந்த காலை வேளையில் சூட்கேசை திருடிக் கொண்டு அறையைவிட்டுக் கிளம்பி விட்டார் கருணாமூர்த்தி. எழும்பூரில் உள்ள அழகுமுத்துக்கோன்சிலை அருகே பெட்டியும் கையுமாக கருணா மூர்த்தி வருவதை கண்ட இரவு ரோந்துப்பணியில் இருந்த போலீசார் சந்தேகம் கொண்டனர்.
பெட்டி பற்றி விசாரித்தபோது நானும் போலீஸ்தான் என்று கருணா மூர்த்திமிரட்டியிருககிறார். ஆனால், ரோந்துப் பணி போலீசார் நம்பாமல் அவரை இழுத்துக்கொண்டு போலீஸ் நிலையத்திற்குச் சென்றனர்.
அதற்குள் பெட்டியை பறி கொடுத்த அருணகிரி நாதனும் புகார் கொடுக்க அங்கேவந்தார். பெட்டி விஷயம் வெளிச்சமானது. சக போலீசாரிடமே கை வரிசை காட்டியகருணாமூர்த்தியை கைது செய்து சிறையில் தள்ளினர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications