பிரேமதாசா மீது இலங்கை தளபதி புகார்
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் கொடுத்து, உதவி செய்தது பிரேமதாசா அரசுதான் என்று இலங்கை ராணுவ தளபதி குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை ராணுவத் தளபதி லியோனல் பலகல்லே ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இந்திய அமைதிப்படை இலங்கையில் சுமார் 4ஆண்டுகள் தங்கி, புலிகள் இயக்கத்தை பலவீனப்படுத்தியது. ஆனால், மறைந்த அதிபர் பிரேமதாசா புலிகள் இயக்கத்துக்கு ஏராளமான ஆயுதங்களைக்கொடுத்து உதவி செய்து அந்த இயக்கத்துக்குப் புத்துயிர் அளித்தார்.
1988-ம் ஆண்டு இலங்கையில் இருந்து இந்திய அமைதிப் படையை வெளியேற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் புலிகளுக்கு ஆயுத உதவி செய்தார்பிரேமதாசா. அவர் எந்தவித முன்யோசனையும் இல்லாமல் செயல்பட்டார்.
இந்திய அமைதிப் படையினர் இலங்கையிலிருந்து வெளியேறிய நேரத்தில், புலிகளை எதிர்த்துப் போரிட இலங்கை ராணுவம் தயாராக இல்லை. 1990 ம் ஆண்டுபுலிகள் தாக்குதல் நடத்தத் தொடங்கிய போதுதான் ராணுவமும் முடுக்கி விடப்பட்டது. பின்னர் 1994 ம் ஆண்டு சந்திரிகா அரசு ஆட்சிக்கு வந்தது.
சந்திரிகா அரசு வந்ததும், விடுதலைப் புலிகளுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்த பல முறை முயற்சி எடுத்தோம். ஆனால் புலிகள் உடன்படவில்லை. அந்தநேரத்தில் ராணுவம் திறமையாகச் சண்டையிட்டு, யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியது.
இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டுமானால், அங்குள்ள தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். புலிகளை, ராணுவம் முறியடிக்கவேண்டும். சமீபத்தில் யானைஇறவு முகாமில் விடுதலைப்புலிகளிடம், ராணுவம் தோற்றதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம் என்று தனதுபேட்டியில் கூறியுள்ளார் லியோனல்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications