கசப்புணர்வுடன் முடிந்த கரும்பு விவசாயிகள் போராட்டம்
அரூர்:
கரும்பு விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது அதிகாரிகளுக்கும்விவசாயிகளுக்கும் ஏற்பட்ட மோதலில் தாலுகா அலுவலகம் மற்றும் அரசுவாகனங்கள் சூறையாடப்பட்டன.
ஈரோடு மாவட்டம், அரூரில் கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் மற்றும்பேரணி கடந்த நவ.4 -ம் தேதி நடந்தது. கரும்புக்கு உரிய விலை தர வேண்டும்,சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையைஉடனடியாக வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்புவிவசாயிகள் இப் போராட்டத்தை நடத்தினர்.
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் மாசி முன்னிலை வகித்தார்.அரூரில் நடந்த பேரணிக்குப் பின்னர் தாலுகா அலுவலகத்திற்குச் சென்று விவசாயிகள்ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது திடீரென அங்கிருந்த அரசு ஊழியர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையேவாய்த்தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து திடீரென விவசாயிகள் அலுவலகத்தில் புகுந்து அங்கிருந்த பொருட்களைசூறையாடினர். ஜீப் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசாருக்குத்தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக வந்து விவசாயிகளை அப்புறப்படுத்தினர்.
போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி வருவாய்த் துறைஅலுவலர்கள் சங்கத்தினர் திடீர் போராட்டத்தில் இறங்கினர். உரிய நடவடிக்கைமேற்கொள்வதாக போலீசார் அளித்த உறுதியின் பேரில் இப் போராட்டம்கைவிடப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்டவிவசாயிகள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில்,
அரூர், பாறைப்பட்டி, சிந்தல்வாடி, ராமியான்பட்டி ஆகிய ஊர்களைச் சேர்ந்தவிவசாயிகள் சிலரைப் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தற்போது, விவசாயிகள் கைது செய்யப்பட்டது குறித்து மீண்டும் போராட்டம் நடத்தவிவசாயிகள் சங்கம் தீர்மானித்துள்ளனர். இதனால்,
அரூரில், மீண்டும் பிரச்னை உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications