எம்.எல்.ஏ.க்களைக் கடத்த வீரப்பன் திட்டம்?
ஈரோடு:
ராஜ்குமார் கடத்தலைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்களைக் கடத்த வீரப்பன்திட்டமிட்டுள்ளதாக கிடைத்துள்ள தகவலையடுத்து போலீஸார்உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் பிரச்னை இன்னும் முடிவடையாத நிலையில்தற்போது புதிய சிக்கல் ஒன்று கிளம்பியுள்ளது. ராஜ்குமாரைக் கடத்திச் சென்றதன் மூலம்இன்னும் பிரச்னை தீரவில்லை என்று எண்ணியுள்ள வீரப்பன்,எம்.எல்.ஏ.,எம்.பி.,க்களைக் கடத்தலாம் என போலீசாருக்கு உளவுத் தகவல்கள்கிடைத்துள்ளன.
இந்த தகவலையடுத்து தற்போது வீரப்பன் நடமாட்டம் உள்ளதாகச் சந்தேகிக்கப்படும்தெங்குமரஹாடா மற்றும் பவானிசாகர், அந்தியூர் ஆகிய பகுதிகளில் போலீசார் தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீரப்பனின் கடத்தல் நாடகம் அடுத்துத் தொடராமல் இருக்க, கோபிச் செட்டிபாளையம்எம்.பி.யான காளியப்பனுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புஅளிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், இந்த எச்சரிக்கையை மீறி வரும் பவானிசாகர் எம்.எல்.ஏ.,வானஆண்டமுத்துவால் போலீசாருக்குப் பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது.ஆண்டமுத்துவின் சொந்த ஊர் நம்பியூர் அருகே உள்ள வெட்டைப்பாளையம் ஆகும்.இங்கு ஆண்டமுத்து சென்று வந்தாலும், அடிக்கடி அவர் தங்குவது பவானியில் உள்ளபவானி இல்லத்தில் தான்.
பவானி இல்லம், எம்.எல்.ஏ.,தங்குவதற்கு ஏற்ற இடமல்ல. இங்கு போலீசாரால் சரிவரபாதுகாப்பு அளிக்க இயலாது எனக் கருதுகின்றனர். எனவே, எம்.எல்.ஏ.,விடம்நேரடியாக போலீசார் தெரிவித்து விட்டனர். ஆனால் அவரோ இந்த எச்சரிக்கையைபொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
எனவே, போலீசார் இந்த தகவலைத் தெரிவித்ததற்கான அத்தாட்சியாகஎம்.எல்.ஏ.,விடமே எழுதி வாங்கிக் கொண்டனர். தொடர்ந்து அவருக்கு உரியபாதுகாப்பை அளித்து வருகின்றனர். இருந்தபோதிலும், ஏதாவது அசம்பாவிதம்நடந்து விடுமோ என்ற அச்சத்தில் போலீசார் இருந்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications