தீர்ப்பை மதிக்கிறோம் .. கர்நாடக முதல்வர்
பெங்களூர்:
மைசூர் தமிழ்த் தடா கைதிகளை விடுவிப்பது தொடர்பான வழக்கில், சுப்ரீம் கோர்ட்அளித்துள்ள தீர்ப்பை மதிக்கிறோம் என்று கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாகூறியுள்ளார்.
தடா கைதிகளை விடுவிக்க மறுத்து சுப்ரீம் கோர்ட் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது.இதையடுத்து வீரப்பன் பிடியில் இருக்கும் ராஜ்குமார் விடுதலை குறித்து குழப்பம்ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கர்நாடக சட்டசபையில், முதல்வர் கிருஷ்ணா செவ்வாய்க்கிழமை ஒருஅறிக்கை சமர்ப்பித்தார். அதில், இந்த தீர்ப்பு நாங்கள் எதிர்பார்த்ததே. இந்தத் தீர்ப்பு நடிகர்ராஜ்குமாரை மீட்க உதவும் என்று நினைத்தோம். ஆனால் சட்டத்தை மதிக்க வேண்டும்என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. இந்தத் தீர்ப்பை மதிக்கிறோம்.
நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்கான மாற்று வழிகள் குறித்து சிந்திக்க இது நேரமல்ல.அதேசமயத்தில், மாற்று யோசனையே இல்லாமல் அரசு இருப்பதாக யாரும் தவறாகநினைத்து விடக் கூடாது. நமது முக்கியமான எண்ணம், ராஜ்குமார் பத்திரமாக மீட்கப்படவேண்டும் என்றே இருக்க வேண்டும்.
வீரப்பனைப் பார்க்க அரசுத்தூதர்கள் எப்போது காட்டுக்குப் போவார்கள் என்று என்குத்தெரியாது. தமிழக முதல்வர் கருணாநிதியைத் தொடர்பு கொண்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகுறித்து விவாதிப்பேன் என்றார் கிருஷ்ணா.
முன்னதாக தீர்ப்பு வெளியானவுடன் ராஜ்குமார் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டுகிருஷ்ணா பேசினார். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு குறித்து அவர்களிடம் அவர்விவாதித்ததாகத் தெரிகிறது.
யு.என்.ஐ.
தடா கைதிகளை விடுவிக்க முடியாது .. சுப்ரீம் கோர்ட்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications