அல்-உம்மா தீவிரவாதிகளை விடுவிக்க பயங்கரத் திட்டம்
கோவை:
குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல்-உம்மா தலைவர் பாட்ஷா மற்றும் மதானிஉள்ளிட்ட கைதிகளை அதிரடியாக விடுவிக்க தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக போலீசாருக்கு ரகசியத்தகவல்கள் கிடைத்துள்ளன.
வீரப்பன் பானியில் தமிழகத்தின் முக்கிய அரசியல் பிரமுகர் யாரையாவது கடத்திச் சென்று இவர்களை விடுவிக்கநிபந்தனை விதிக்க இந்தத் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.
கோவையில் கடந்த 98ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 60 கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக 168 பேர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீதானவழக்கு விசாரணை தற்போது தான் துவங்கியுள்ளது.
இந்த வழக்கில், இன்னும் முக்கிய குற்றவாளிகளில் பலர் தலைமறைவாக இருந்து வருகின்றனர். இதில், இப்ராஹிம்,ஆயிஷா, டெய்லர் ராஜா உட்பட 6 பேரை போலீசார் நாடு முழுவதும் தேடியும் கண்டுபிடிக்க இயலவில்லை.
சமீபத்தில் பெங்களூரில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து டெய்லர் ராஜாவைப் பிடிக்கப் போலீசார்கர்நாடகம் சென்றனர். ஆனால் அங்கிருந்து டெய்லர் ராஜா தப்பிச் சென்றதையடுத்து ஏமாற்றத்துடன் போலீசார்திரும்பினர்.
இதையடுத்து தலைமறைவாகச் செயல்பட்டு வரும் குண்டு வெடிப்புக் கைதிகள், சிறையில் உள்ள கைதிகளை மீட்கதீவிரவாதிகள் ஆலோசனை நடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல்கள் கிடைத்துள்ளது. இதையடுத்துபோலீசார் கோவையில் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள காவல்துறை தலைமையகத்திலிருந்து கோவை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு ஒரு கடிதம்வந்துள்ளது.
இதில், டெய்லர் ராஜா உள்ளிட்ட தலைமறைவாக உள்ள தீவிரவாதிகளிடம் தற்போது ஏ.கே 47 ரகத் துப்பாக்கிஉள்ளது. இந்தத் துப்பாக்கியைப் பயன்படுத்தி தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களைக்கடத்திச் செல்லத் திட்டமிட்டுள்ளனர். வீரப்பன் பாணியைப் பின்பற்றி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாஷாமற்றும் மதானி உட்பட பலரை விடுதலை செய்ய நிபந்தனை விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள்கிடைத்துள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கடிதம் போலீசார் மத்தியில் பரபரப்பபையும், பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications