பஸ் எரிப்பில் இறந்த மாணவிகள் பெயரில் அறக்கட்டளை

Subscribe to Oneindia Tamil

கோவை:

தர்மபுரியில் நடந்த பஸ் எரிப்புச் சம்பவத்தில் பலியான 3 மாணவிகளின் பெயரில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளை துவங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அ.தி.மு.க.,பொதுச் செயலர் ஜெயலலிதாவிற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பையடுத்து தர்மபுரியில் வன்முறைஏற்பட்டது. அப்போது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்திற்குச் சொந்தமான பஸ்சை சிலர் தீ வைத்துக் கொளுத்தினர்.

கொளுத்தியவர்கள் அதிமுகவினர் என புகார் கூறப்பட்டு கைதும் செய்யப்பட்டனர்.

இந்த ஈவு இரக்கமற்ற பஸ் எரிப்பில் சம்பவத்தில் ஹேமலதா, கோகிலவாணி, காயத்ரி ஆகிய மூன்று அப்பாவி மாணவிகள் தீயில்கருகி இறந்தனர்.

இவர்களின் நினைவாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் ஒரு அறக்கட்டளை துவங்கப்பட்டுள்ளது. இந்தஅறக்கட்டளைக்கு தமிழம் என்ற அமைப்பு 60 ஆயிரம் நிதியுதவி அளித்துள்ளது.

தமிழம் என்ற இந்த அமைப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையை தமிழில் புகுத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.அதே சமயம், இன்டர்நெட்டில் தமிழை அதிக அளவில் கொண்டு வரும் முயற்சியிலும் இந்த அமைப்பு ஈடுபட்டு வருகிறது.

கோவையில் நடந்த அறக்கட்டளைத் துவக்க விழாவில், வேளாண்மைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் கண்ணையன், மற்றும்தமிழம் அமைப்பைச் சேர்ந்த இளங்கோவன், ரமணி, சத்தியர்த்தி, சால்தீன், மலரமுதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் துவங்கப்பட்டுள்ள இந்த அமைப்பிற்கு பேரூர் தமிழ்க் கல்லூரி நிர்வாகிமருதாச்சல அடிகள் 60 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+