இந்திய அமைச்சரவை விரிவாக்கம்
டெல்லி:
வாஜ்பாய் அமைச்சரவை செவ்வாய்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது.
மத்திய சட்டத்துறை இணை அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி காபினட் அமைச்சராக்கப்பட்டார். அவரிடம் கூடுதலாக கப்பல் துறையும்ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உமா பாரதி மத்திய விளையாட்டுத் துறை கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த சுக்தேவ் சிங்தின்ஷாவுக்கு ரசாயனம் மற்றும் உரத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்தத் துறையின் அமைச்சராக இருந்த சுந்தர்லால் பட்வா, சுரங்கத்துறைக்குமாற்றப்பட்டுள்ளார்.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள உத்தராஞ்சல் மாநிலத்தின் பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் பவான் சந்திர கந்தூரி, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சாலைப்போக்குவரத்து மற்றம் தேசிய நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
காபின்ட் பதவி தராததால், ஜார்க்கண்ட் பகுதி எம்.பி. கரியமுன்டே கடைசி நிமிடத்தில் பதவியேற்க மறுத்து விட்டார். அவர் முந்தைய 13 நாள் வாஜ்பாய்அரசில் அவர் காபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சரவை விரிவாக்கத்தின்போது மூலம் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையின் பலம் 75 ஆக உயர்ந்துள்ளது. இதில் 30 பேர் காபினட்அமைச்சர்கள்.
செப்டம்பர் 30 ம் தேதி நடந்த அமைச்சரவை விரிவாக்கத்தின் போது பா.ஜ.பொதுச்செயலாளர் வெங்கய்ய நாயுடு மற்றும் சுஷ்மா சுவராஜ் ஆகியோர்காபினட் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர் என்பதும், அவர்களுடன் 4 இணை அமைச்சர்களும் பொறுப்பேற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத்தின் அசோகா ஹாலில் நடந்த எளிமையான விழாவில் அவர்களுக்கு ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் பதவிப்பிரமாணமும், ரகசியப்பிரமாணமும் செய்து வைத்தார். விழாவில் பிரதமர் வாஜ்பாய், மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications