என் துப்பாக்கி எனக்கே எனக்கு...நடராஜன்
சென்னை:
லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட எனது துப்பாக்கியை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை தனி நீதிமன்றத்தில்சசிகலாவின் கணவர் நடராஜன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்பட நால்வர் மீதான வழக்கு தனி நீதிமன்றத்தில்நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே தனி நீதிமன்றத்தில் புதன்கிழமை நடராஜன், ஒரு மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது:
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் எனக்கு தொடர்பில்லை. இந்த வழக்குத் தொடர்பாக விசாரித்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார்எனது துப்பாக்கியை பறிமுதல் செய்து வைத்துள்ளனர்.
நான் அரசு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்று தற்போது இரண்டு பத்திரிக்கைகளுக்கு ஆசிரியராக இருந்து வருகிறேன். இந்த வழக்கிற்குதொடர்பில்லாத சுந்தரவதனம் (சசிகலாவின் அண்ணன்) வைத்திருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரிடம் ஒப்படைத்து விட்டனர்.
அதேபோல் எனது துப்பாக்கியையும் என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி ஆறுமுகப் பெருமாள்ஆதித்தன் வருகிற 15 ம் தேதி பதில் அளிக்கும்படி லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications