நஷ்டத்தில் மூழ்கியது தேவூ கார் நிறுவனம்
Subscribe to Oneindia Tamil
கொரியா:
கொரிய நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான தேவூ நஷ்டத்தில் மூழ்கிய நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்துக்கு கடன் தந்திருந்த கொரிய டெவலப்மென்ட் பேங்க் உள்ளிட்ட அனைத்து வங்கிகளும்இணைந்து இதனை அறிவித்தன.
இந்த வங்கிகளுக்கு தேவூ நிறுவனம் 39 மில்லியன் டாலரை செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், அந்தநிறுவனத்தால் கடனை செலுத்த முடியவில்லை.
பெரும் நஷ்டத்தில் இயங்கி வரும் இந்த நிறுவனம் சுமார் 3,500 தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கதிட்டமிட்டது. ஆனால், இதற்கு தொழிலாளர் சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
இந் நிலையில் இந் நிறுவனம் நஷ்டத்தில் மூழ்கிய நிறுவனமாக அறிவித்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications