திருப்பதியில் பக்தர்களுக்கு பாஸ் புக்
திருப்பதி:
திருப்பதி வெங்கடாச்சலபதி ஆலயத்திற்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு பாஸ் புத்தகங்கள் வழங்க திருமலை -திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தினர்திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரி கிருஷ்ணய்யா நிருபர்களிடம் கூறியதாவது:
திருப்பதியில் சுவாமி வெங்கடாச்சலபதியை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நன்கொடை அளிக்கும் பக்தர்கள் உயர்அதிகாரிகளின் பரிந்துரை பெற்றால் தான் சிறப்பு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த பக்தர்கள் இனிமேல் நேரடியாகவே சிறப்பு தரிசனம் செய்ய பாஸ் புத்தக வசதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அவர்கள் பாஸ் புத்தகத்தைக்காட்டி எளிதாக கோவிலுக்குள் சென்று வரலாம். சனி, ஞாயிறுகளிலும், விடுமுறை தினங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால்அவர்களுக்கு சுவாமி தரிசனம் செய்வதிலும், திருப்பதியில் தங்குவதிலும் பல வசதிக்குறைவுகள் ஏற்படுகின்றன.
அவர்களது பிரச்சனைகளைப் போக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மேலும் பக்தர்களின் வருகை அதிகரிப்பால் சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள்ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்க போக்குவரத்தை சீர்செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்களின் தேவைக்கேற்ப கோவில் பிரகாரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யவும்உத்தரவிடப்பட்டுள்ளது.
வைகுண்டம் காம்பிளக்சில் சிலர் வரையறுக்கப்பட்ட விலைக்கு அதிகமாக பொருட்களை விற்பனை செய்கிறார்கள். அவர்கள் மேல் வழக்குத்தொடரவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் லட்டு வழங்கும் கவுண்டர்களில் கூட்டத்தைச் சமாளிக்க ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் கிருஷ்ணய்யா.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications