நான் இனி காட்டுக்குள் போக மாட்டேன்- நெடுமாறன் "பல்டி"
சென்னை:
வீரப்பனைச் சந்திக்க இனி காட்டுக்குள் செல்ல மாட்டேன் என தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்அறிவித்துள்ளார்.
காட்டுக்குள் பழ. நெடுமாறன் செல்வதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. முன்னதாககாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இவ் விஷயத்தில் தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்தார்.
இப்போது காங்கிரசுக்கு ஆதரவாக தமிழ் மாநில காங்கிரசும் இந்தப் பிரச்சனையை கையில் எடுத்துள்ளது.சட்டசபையில் செவ்வாய்க்கிழமை த.மா.கா., அ.தி.மு.க. ஆகியவை இந்தப் பிரச்சனையைக் கிளப்பின.
ஆனால், இது குறித்துப் பேச சபாநாயகர் பழனிவேல் ராஜன் அனுமதி மறுத்தார். இதையடுத்து அக் கட்சிகள்வெளிநடப்பு செய்தன. த.மா.க. சட்டப் பேரவைத் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் நெடுமாறனை கடுமையாகவிமர்சனம் செய்தார்.
இதையடுத்து இனி காட்டுக்குள் செல்ல மாட்டேன் என நெடுமாறன் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டஅறிக்கையில், என் இனிய நண்பரும் தேசிய பற்றாளருமான சோ. பாலகிருஷ்ணனை காட்டுக்குள் அனுப்புமாறுமுதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். அவர் காட்டுக்குள் சென்று வீரப்பனைச் சந்தித்துப் பேசி ராஜ்குமாரைமீட்டு வரட்டும்.
நான் மனிதாபிமான அடிப்படையில் தான் காட்டுக்குள் சென்றேன். அரசுத் தூதராக செல்லவில்லை. கர்நாடகத்தில்வசிக்கும் 40 லட்சம் தமிழர்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் சிலர் இந்தப் பிரச்சனையை குழப்பிவருகிறார்கள்.
இவ்வாறு நெடுமாறன் அறிக்கையில் கூறியுள்ளார்.
நெடுமாறனின் இந்த திடீர் பல்டியால் கர்நாடக அரசும், ராஜ்குமார் குடும்பத்தினரும் பெரும்கவலையடைந்துள்ளனர். அவர்களை விட கருணாநிதி அதிக வருத்தம் அடைந்துள்ளார். சட்டசபை கூட்டம்முடிவதற்கு முன்பே ராஜ்குமாரை மீட்டு வந்துவிடலாம் என கருணாநிதி நம்பினார். அது நடக்காமல் போகும் நிலைஏற்பட்டுள்ளது.
இரு நாட்களாக நெடுமாறன், நக்கீரன் கோபாலுடன் தொலைபேசியில் தொடர்ந்து பேசி வரும் கருணாநிதி மீண்டும்நெடுமாறனுடன் பேசுவார் எனத் தெரிகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications