நின்றுபோன தூதுக்குழுவின் பயணம்
சென்னை:
வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்த நெடுமாறன் மறுத்து விட்டதால் தூதுக்குழுவின் பயணம் நிறுத்தப்பட்டு விட்டது என்று நக்கீரன் பத்திரிக்கையாசிரியர்கோபால் கூறினார்.
நடிகர் ராஜ்குமாரை மீட்பது பற்றி சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் ஆறாவது முறையாக பேச்சுவார்த்தை நடத்த தமிழர் தேசிய இயக்கத் தலைவர்நெடுமாறன், நக்கீரன் ஆசிரியர் கோபால், பேராசிரியர் கல்யாணி, புதுச்சேரியைச் சேர்ந்த சுகுமாறன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை காட்டிற்குப்புறப்பட்டுச் செல்வதாக இருந்தனர்.
இந்த நிலையில் தமிழக சட்டசபையில் செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் பேசும் போது நெடுமாறன் காட்டிற்கு செல்வதற்குகடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அவர் பேசும்போது நெடுமாறனை தேச விரோதி என்றார்.
சோ.பாலகிருஷ்ணனின் இந்தப் பேச்சுக்கு நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்தார். இது குறித்துத் தெரிந்து கொண்ட நெடுமாறன், சோ.பாலகிருஷ்ணன்வேண்டுமானால் காட்டுக்குச் சென்று வரட்டும் என்றார். இதேபோல் அவருடன் காட்டுக்குச் செல்வதாக இருந்த, பேராசிரியர் கல்யாணி,சுகுமாறன் ஆகியோர் சோ.பாலகிருஷ்ணனின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் நெடுமாறன் குழுவினர் இனிமேல் காட்டுக்குச் செல்லவில்லை என்று கூறியுள்ளனர். இதையடுத்து நக்கீரன் ஆசிரியர் கோபாலும் காட்டுக்குச்செல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications