அமெரிக்காவை குழப்பிய புளோரிடா: வென்றது புஷ்ஷா?அல்கோரா?
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றியை புளோரிடா மாகாணம் முடிவு செய்ததையடுத்து அம் மாகாணத்தில்மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என தேர்தலில் தோல்வியுற்ற துணை அதிபர் அல்கோர்கோரியுள்ளார்.
இந்த மாகாணத்தில் வாக்களித்துவிட்டு வந்தவர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி அல்கோர் தான்வெற்றி பெறுவார் என பல தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் தெரிவித்தன. ஆனால், வாக்குஎண்ணிக்கையில் புஷ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருவருமே கிட்டத்தட்ட சம பலத்தில் இருந்த நிலையில் புளோரிடாவில் கிடைத்த வெற்றி காரணமாக புஷ்அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக கணிப்புகள் வெளியாகின. ஆனால், புளோரிடாவில் மீண்டும் வாக்குஎண்ணிக்கை நடத்த வேண்டும் என கோர் கோரியுள்ளதாகத் தெரிகிறது.
1 சதவீதக்குக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் அல்கோரை புஷ் வென்றுள்ளார்.
இந்த மாகாணத்தில் கிரீன் பாட்டியின் ரால்ப் நாடர் 93,500 வாக்குகள் பெற்றார். இதில் பாதி ஓட்டுகள்அல்கோருக்கு போய்ச் சேர்ந்திருக்க வேண்டியவை. இதன் மூலம் கோரின் வெற்றியை நாடர் கெடுத்துள்ளார்.
புளோரிடாவில் கிடைத்த வாக்குகளில் 50 சதவீத வாக்குகளை புஷ் பெற்றுள்ளார். ார் 48 சதவீத வாக்குகளைப்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாயின.
இப்போது மாகாண கவர்னராக உள்ள புஷ் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர். இவருக்கும் இப்போது ஆட்சியில்உள்ள ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான துணை அதிபர் அல் கோருக்கும் இடையே தேர்தலில் மிகக்கடுமையான போட்டி நிலவியது.
மொத்தம் 270 எலெக்ட்டோரல் காலேஜ் வாக்குகளை வென்றால் வெற்றி என்ற நிலையில் புஷ் 271வாக்குகளையும் கோர் 249 வாக்குகளையும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
புஷ் 246 வாக்குகளையும் கோர் 249 வாக்குகளையும் வென்றிருந்த நிலையில் புளோரிடா மாகாணத்தில்கிடைக்கும் வாக்கு தான் வெற்றியை நிர்ணயிக்கும் என்ற பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இறுதியில் புளோரிடாபுஷ்சுக்கு ஆதரவாக வாக்களித்ததால் அவர் வெற்றி பெற்றார் என அனைத்து கருத்துக் கணிப்பாளர்களும்தெரிவித்தனர்.
இப்போது மறு வாக்கு எண்ணிக்கைக்கு கோர் கோரிக்கை விடுத்திருப்பதால் புஷ்ஷின் வெற்றியும் கோரின்தோல்வியும் கேள்விக்குறியாகியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications