முரசொலி மாறன் உடல் நிலை கவலைக்கிடம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Murasoli Maranமத்திய அமைச்சரும், திமுக தலைவர்களில் ஒருவருமான முரசொலி மாறனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இதய நோய் தொடர்பாக சென்னை அப்பல்லோ மருத்துவனையில் அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அவரது உடல் நிலை கவலைக்கிடமாகவேஉள்ளதாக அப்பல்லோ மருத்துவனையின் தலைவர் பிரதாப் சி. ரெட்டி கூறினார்.

அப்ஸ்டக்ட்டிவ் கார்டியாக் மயோபதி என்ற பிரச்சனையால் அவரது இதயம்பாதிக்கப்பட்டுள்ளது.

ரெட்டி கூறுகையில், நாங்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம். எங்களிடம்அனைத்து மருத்துவ வசதிகளும் உள்ளன. அடுத்து வரும் சில மணி நேரங்கள் மிகமுக்கியமானவை.

மத்திய ஊரகத்துறை அமைச்சரும் பா.ஜ.க. தலைவருமான வெங்கைய்ய நாயுடுஅப்பல்லோ மருத்துவமனையில் மாறனை பார்க்க வந்தார். அப்போதுசெய்தியாளர்களிடம் கூறுகையில், அவரது உடல் நிலை தேற பிரார்தனை செய்கிறேன்என்றார்.

அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவக் குறிப்பில்,

மாறனின் இதயத்தின் இடதுபக்க வெண்ட்ரிக்கிள் இயங்கவில்லை. இதையடுத்து பேஸ்மேக்கர் கருவி மூலம் அவரது இதயம் இயங்க வைக்கப்பட்டது. ஆனால், நேற்று இரவு9.21 மணிக்கு அவரது உடல் நிலை மோசமடைந்தது.

இதையடுத்து செயற்கையாக சுவாசம் அளிக்கப்பட்டது. அவருக்கு தொடர்ந்து பலநவீன சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. புதன்கிழமை காலை அவர் தீவிரசிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+