தமிழக அமைச்சர் மனைவிக்கு கைது வாரண்ட்
சேலம்:
தமிழக அமைச்சர் பழனிச்சாமியின் மனைவி விஜயலட்சுமிக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பொங்கலூர்பழனிச்சாமி இருந்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி பழனிச்சாமி. இவர்கோவை புறநகர் மாவட்ட தி.மு.க. செயலராகவும் இருந்து வருகிறார்.
திருச்சி அருகே கள்ளக்குடி என்ற இடத்தில் நீலகிரி சிமெண்ட் தொழிற்சாலை செயல்பட்டுவருகிறது. இதன் நிர்வாக இயக்குனராக விஜயலட்சுமி பழனிச்சாமி பணியாற்றி வருகிறார்.
இந் நிலையில் சேலத்தில் உள்ள மணி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தில் இருந்துசிமெண்டிற்கான மூலப் பொருட்கள் நீலகிரி சிமெண்ட் தொழிற்சாலைக்கு சப்ளைசெய்யப்பட்டு வந்தது.
இந்த வகையில் ரூ. 2 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் பாக்கியை சிமெண்ட் தொழிற்சாலைசெலுத்த வேண்டியிருந்தது. இந்தத் தொகையைச் செலுத்துமாறு மணி வலியுறுத்தி வந்தார்.இதையடுத்து தொழிற்சாலையை நிர்வகித்து வரும் விஜயலட்சுமி கடந்த பிப்ரவரி மாதம்மூன்று செக்குகளைக் கொடுத்தார்.
இதில் ரூ. 32,450க்கு ஒரு செக்கும், ரூ. 20 ஆயிரத்திற்கு ஒரு செக்கும், ரூ. 27 ஆயிரத்து825 ரூபாய்க்கு ஒரு செக்கும் இரண்டு மாதங்களில் வழங்கப்பட்டது.
இதனைப் பெற்றுக் கொண்ட மணி எண்டர்பிரசைஸஸ் சுப்ரமணியம், வங்கியில்போட்டுள்ளார்.
ஆனால், வங்கியிலிருந்து மூன்று செக்குகளுமே திரும்பி வந்துவிட்டன. நீலகிரி சிமெண்ட்தொழிற்சாலையின் கணக்கில் பணம் இல்லை என இவை திருப்பி அனுப்பப்பட்டன. செக்திரும்பியதையடுத்து பணம் கேட்டு சுப்ரமணி கடிதம் எழுதினார். போனில் பேசினார்.
ஆனால் பணம் கிடைக்கவில்லை. சரியான பதிலும் நிறுவனத்திடமிருந்துகிடைக்கவில்லை. இதையடுத்து அமைச்சரின் மனைவி விஜயலட்சுமி மீது சேலம் நடுவர்நீதிமன்றம் எண்- 3ல் சுப்ரமணியம் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கத் தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு விஜயலட்சுமிக்கு மாஜிஸ்திரேட்உத்தரவிட்டார். ஆனால் விஜயலட்சுமி ஆஜராகவில்லை. எனவே நீதிமன்ற உத்தரவைஅலட்சியப்படுத்தியதற்காக ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துமாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications