சட்டீஸ்கர்: வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

ராய்ப்பூர்:

இந்தியாவின் 26 வது மாவட்டமான சட்டீஸ்கார் மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் வேறுஇடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்வதை தவிர்க்கும் வகையில் அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும்திட்டங்களை அறிமுகப்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

சட்டீஸ்கார் மாநிலத்தின் முதல்வர் அஜித் ஜோகி இதுகுறித்து நிருபர்களிடம் கூறியதாவது:

தலைநகர் ராய்ப்பூரிலுள்ள நில்ஜர் மற்றும் தாரிஷ்டா பகுதிகளில் வறட்சியால் மக்கள் பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து செல்கிறார்கள்.

இதைத் தடுத்து நிறுத்தும் வகையில் அவர்களுக்கு வேலைவாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளோம். வறட்சியால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமான அளவு குடிநீர் வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்.

பிரதமர் வாஜ்பாய் மற்றும் மத்திய வேளாண்துறை அமைச்சர் நிதிஷ் குமார் ஆகியோர் அனைத்து உதவிகளையும்செய்து கொடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர் என்றார்.

முன்னதாக, மத்தியப் பிரதேசத்தை இரண்டாகப் பிரித்து உருவான சட்டீஸ்கர் மாநிலத்தின் முதல் முதல்வராக அஜித்ஜோகி கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டபின் செய்யும்முதல் செயல்திட்டம் இதுவே.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+