சோனியா பின்னால் அணி திரண்ட தமிழக காங்கிரஸ்
சென்னை:
காங்கிரஸ் தலைவர் தேர்தலில், தமிழகத்தில் உள்ள அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் சோனியா காந்தியை ஆதரிப்பது என்று முடிவு செய்திருப்பதாக தமிழககாங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்.
வரும் நவம்பர் 12 ம் தேதி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடக்கிறது. இதில் தலைவர் பதவிக்கு சோனியா காந்தியும், ஜிதேந்திர பிரசாத்தும்போட்டியிடுகிறார்கள்.
தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து முடிவு செய்ய தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடந்தது.
கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருணாசலம், பிரபு, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் குமரிஅனந்தன், மரகதம் சந்திரசேகர், அன்பரசு, அடைக்கலராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்தபின் தமிழக காங்கிரஸ் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் சோனியா காந்தியை ஆதரிப்பது என முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்திலுள்ள 513 பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், 35 மாவட்ட தலைவர்கள் மற்றும் 5 முன்னாள் காங்கிரஸ் தலைவர்களும் ஓட்டுப்போடுவார்கள். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடந்தபின் மாநில தலைவர் தேர்தல் நடக்கலாம் என்றார் இளங்கோவன்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications