டான்சி: ஜெ-சசி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
டான்சி நிலப் பேர ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும், தனி நீதிமன்றத்தில் ஆஜராகி,தங்கள் ஜாமீன் பத்திரங்களைத் வரும் 17 ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.
டான்சி நிலப் பேர ஊழக்கில் ஜெயலலிதா, சசிகலா, முகமது ஆசிப், சீனிவாசன், நாகராஜன், கற்பூர சுந்தர பாண்டியன், ஆகியோருக்கு கடந்த மாதம் 9 ம்தேதி 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், அபராதமும் விதித்து தனி நீதிபதி அன்பழகன் உத்தரவிட்டது தெரிந்ததே.
தனிநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்பட தண்டனை பெற்ற அனைவரும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
மனுக்களைப் பெற்ற உயர்நீதிமன்றம் தண்டனை பெற்ற அனைவரையும், ரூ 50 ஆயிரம் சொந்த ஜாமீனிலும், அதே தொகைக்கான இரு நபர்ஜாமீனிலும், நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
மேலும் உயர்நீதிமன்றம் அவர்களை ஜாமீனில் விடுதலை செய்துள்ளதால் ஜெயலலிதா உள்ளிட்டோர், தனிநீதிமன்றத்தில், ஜாமீன் பத்திரங்களைத் தாக்கல்செய்ய செவ்வாய்க்கிழமை ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், முகமது ஆசிப், சீனிவாசன், நாகராஜன், கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் ஜாமீன் பத்திரங்களைத் தாக்கல் செய்தனர்.
ஜெயலலிதா மற்றும் சசிகலா தரப்பில் அவர்களது வக்கீல், 3 வது தனிநீதிமன்றத்தில் தனித்தனியாக இரு வழக்குகளுக்கும் மனுக்களைத் தாக்கல்செய்தனர். அந்த மனுவில், தனி நீதிமன்றத்தில் வழங்கிய தண்டனையை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
தனி நீதிமன்றத்தில் ஜாமீன் பத்திரங்களைத் தாக்கல் செய்வதற்கான எந்தக் காலக் கெடுவையும் உயர்நீதிமன்றம் விதிக்கவில்லை. ஜெயலலிதாவும்,சசிகலாவும் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ளதால் அவர்கள் விரைவில் ஆஜராகி ஜாமீன் பத்திரங்களைத் தாக்கல் செய்வார்கள் என்று அந்த மனுவில்கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த மூன்றாவது தனிநீதிபதி அன்பழகன் வரும் 17 ம் தேதிக்குள் ஜெயலலிதாவும், சசிகலாவும், தனி நீதிமன்றத்தில் ஆஜராகிஜாமீன் பத்திரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications