தீவிரவாதத்தை முறியடிக்க இந்தியா-துருக்கி திட்டம்
டெல்லி:
சர்வதேச அளவில் நடக்கும் தீவிரவாதத்தை, இந்தியாவும், துருக்கியும் இணைந்து முறியடிப்பது என இரு நாட்டுப்பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
துருக்கி தேசிய பாதுகாப்பு கவுன்சில் பொதுச்செயலாளர் கம்ஹர் ஆஸ்பராக் இந்தியா வந்துள்ளார். அவர், இந்தியப்பாதுகாப்பு கவுன்சில் பொதுச்செயலாளர் சதீஷ் சந்திராவை சந்தித்துப் பேசினார்.
இருவரும், இருநாடுகளிலும் மாநில மற்றும் தேசிய அளவில் நடக்கும் தீவிரவாதங்கள், நாட்டு பாதுகாப்புக்குஇடையூறு விளைவுக்கும் தீவிரவாத இயக்கங்கள், நாட்டுப் பாதுகாப்பு, கடத்தல் சம்பவங்கள் ஆகியவை குறித்துவிவாதித்தனர்.
விவாதத்தில், இரு நாடுகளிலும் நடக்கும் தீவிரவாத செயல்களை அவ்வப்போது பரிமாறிக் கொள்ள வேண்டும்என்று முடிவெடுத்தனர்.
மேலும் சர்வதேச அளவில் இந்தியாவிலும், துருக்கியிலும் அதிகரித்து வரும் தீவிரவாத செயல்களை இருநாடுகளும் இணைந்து முறியடிக்க வேண்டும் என்று திட்டமிட்டனர்.
ஆப்கானிஸ்தானுடன் தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுவது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் இந்திய,துருக்கி பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகள் முடிவெடுத்தனர்.
கடந்த மார்ச்- ஏப்ரல் மாதங்களில் துருக்கி பிரதமர் பூலன்ட் எஸிவிட் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம்மேற்கொண்டார். இதையடுத்து இரு நாட்டு உறவுகள் மேலும் வலுப்பெற்றுள்ளன.
தற்போது, துருக்கி பாதுகாப்பு கவுன்சில் பொதுச்செயலாளர் ஆஸ்பராக்கின் வருகை தீவிரவாதம் மட்டுமின்றி பலவிஷயங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும் வகையில் இருந்தது.
தற்போது டெல்லியிலுள்ள ஆஸ்பராக் ஹைதராபாத்திலுள்ள ஐ.எஸ்.ஆர்.ஓ. மற்றும் மும்பையிலுள்ள பாபா அணுஆராய்ச்சி மையத்தையும் சென்று பார்க்கவுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications