காங்கிரஸ் தேர்தல் ஒரு கேலிக் கூத்து: பா.ஜ.க.
சென்னை:
ராஜ்குமாரை மீட்க நெடுமாறன் செல்வதை குறைகூறுவதா? என்று தமாகாவுக்கு மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு சென்னையில் நிருபர்களிடம் பேசுகையில்,
நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்கு தூதுவராக அனுப்பப்பட்ட நெடுமாறனை தமாகாவினர் விமர்சித்து உள்ளனர். இதனால் நெடுமாறன் தமாகா தலைவரைதூதராக செல்லட்டும் என்று கூறியுள்ளனர்.
ராஜ்குமாரை மீட்கும் நடவடிக்கைகளை விமர்சிப்பது நல்லதல்ல. ராஜ்குமார் கடத்தப்பட்டு 100 நாட்களுக்கு மேல் ஆகிறது. அவரது குடும்பத்தினரும்,கர்நாடக மாநில மக்களும் இதனால் வருத்தத்தில் உள்ளனர்.
ராஜ்குமாரை மீட்பதற்கு மனிதாபிமான முறையில் யார் உதவினாலும் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நெடுமாறன் கொள்கைகள் பிடிக்காமல்இருக்கலாம். ஆனாலும் ராஜ்குமார் மீட்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அவரது உதவியை பயன்படுத்துவதில் தவறில்லை.
இந்தப் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள தீர்ப்பை தொடர்ந்து தமிழக, கர்நாடக அரசுகள் ராஜ்குமாரை மீட்க புது விதிமுறைகளைக் கையாளவேண்டும். எத்தகைய விதிமுறைகள் என்பதை மாநில அரசுகளே முடிவு செய்ய வேண்டும்.
அதற்கு மத்திய அரசு என்ன உதவி செய்ய வேண்டுமோ அதை செய்யும். மாநில அரசுகளைக் கேட்காமல் மத்திய அரசு இந்தப் பிரச்சனையில் தலையிடாது.உதவி கேட்டால் செய்யத் தயாராக இருக்கிறது.
பாலசிங்கத்தை உடல்நலம் விசாரிக்க சந்தித்தேன் என்று வைகோ கூறியுள்ளார். எனவே இந்த சந்திப்பை பெரிது படுத்தாமல் விட்டுவிட வேண்டும். தமிழ்ஈழத்தை மத்திய அரசு ஆதரிக்காது. அதே நேரம் தனிப்பட்டவர்கள் வெவ்வேறு கருத்துக்களை வெளியிடுவதில் தவறு இல்லை.
தமிழக காங்கிரஸ் கட்சித் தேர்தல் கேலிக் கூத்தாக நடக்கிறது. கீழ் மட்டத்தில் இருந்து தேர்தல் நடத்தாமல் மேல் மட்டத்தில் இருந்து தேர்தலைஆரம்பிக்கிறார்கள். சோனியாவுக்கு தன்னம்பிக்கை இல்லாததையே இது காட்டுகிறது என்றார் அமைச்சர் வெங்கய்யா நாயுடு.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications