அல்கோர் முன்னேற்றம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

புளோரிடாவில் நடந்து வரும் மறுவாக்கு எண்ணிக்கையில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான அல்கோர்முதலில் பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகளைப் பெற்று வருகிறார்.

முதலில் அவருக்கும் குடியரசுக் கட்சியின் ஜார்ஜ் புஷ்சுக்கும் இடையே 1,800 வாக்குகள் வித்தியாசம் இருந்தன.இப்போது நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் இந்த வித்தியாசம் 600 ஆகக் குறைந்துள்ளது.

தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. புளோரிடாவில் மொத்தமுள்ள 67 கவுண்டிகளில் 21ல்மறுவாக்கு எண்ணிக்கை இப்போது நடந்து வருகிறது.

இந் நிலையில் சுமார் 2,700 வெளிநாட்டில் வாழும் அமெரிக்கர்களின் வாக்குகள் முக்கிய இடம் வகிக்க உள்ளன.வெளிநாட்டில் உள்ள ராணுவ வீரர்கள் புஷ்க்கு வாக்களித்திருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் இஸ்ரேலில் வசிக்கும் அமெரிக்க யூதர்கள் கோருக்குத் தான் வாக்களித்திருப்பர் எனக் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் வாக்குப் பதிவில் குளறுபடி நடந்தது, வாக்குச் சீட்டில் குழப்பம் இருந்தது, வாக்குச் சீட்டுபற்றாக்குறையால் கருப்பர் இன வாக்காளர்கள் பலர் திருப்பி அனுப்பப்பட்டனர் என புதிது புதிதாய் இப்போதுபுகார்கள் கிளம்பியுள்ளன.

இந்த புகார்கள் குறித்து விசாரிக்க 60க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களை இரு கட்சிகளும் தனி விமானத்தில்புளோரிடாவுக்கு அனுப்பி வைத்துள்ளன. இதனால், வாக்கு எண்ணிக்கை முடிந்தாலும் தோற்பவர் நிச்சயம்நீதிமன்றத்தில் அதை எதிர்த்து வழக்குத் தொடர்வார் எனத் தெரிகிறது. இதற்கான ஆயத்த வேலைகளில் தான் இந்தவழக்கறிஞர்கள் இறங்கியுள்ளளனர்.

இதனால் அடுத்த அதிபரை நீதிமன்றம் தான் முடிவு செய்யப் போகிறது என்கிறார் ஒரு அரசியல் பார்வையாளர்.

ஆனால், நீதிமன்றம் எல்லாம் செல்லும் திட்டமில்லை என்கிறார் கோர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+