ஆயுத்த ஆடை ஏற்றுமதியில் கொடிகட்டிப் பறக்கிறது திருப்பூர்
திருப்பூர்:
ஐரோப்பிய நாடுகளுக்கு 4 ஆயிரத்து 500 டன் ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைத்துள்ளது.
இதில் 250 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடைகளை வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் திருப்பூரிலிருந்து ஏற்றுமதி செய்யமுடியும் என எதிர் பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம் பெல்ஜியம் தலைநகரான பிரஸ்சல்லில் இந்திய ஜவுளித் துறை அமைச்சக அதிகாரிகளுக்கும், ஐரோப்பிய யூனியன் அதிகாரிகளுக்கும்இடையே ஜவுளி ஏற்றுமதி குறித்த பேச்சுவார்த்தை நடந்தது.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது இந்தியாவிலிருந்து அதிக அளவில் ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்ய அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர். ஆனால்கோட்ட முறையில் தான் இந்த ஒதுக்கீடு இருக்கும்.
இந்த ஏற்றுமதியின் அளவு நான்காயிரத்து 500 டன்னாக இருக்கும். இந்தியா முழுவதிலும் உள்ள ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிற்சாலைகள் இதன் மூலம்பயனடைய விருக்கின்றன.
இதில் திருப்பூர் பெருமளவு பங்கினைப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராகி வருகிறது.
அன்மையில் இங்கு நடந்த கோடைகாலக் கண்காட்சியின் போது ஜவுளித்துறை அமைச்சகச் செயலர் சதூர்வேதி இது குறித்து தெரிவித்திருந்தார். தற்போது இந்தவாய்ப்பு கிடைத்ததில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நவம்பர் 10ம் தேதி முதல் கோட்டா அடிப்படையிலான பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த அடிப்படையில் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்றஅடிப்படையில் கோட்டா ஒதுக்கீடு இருக்கும். ஐரோப்பியா நாடுகளுக்கான ஏற்றுமதியில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் பெரும்பங்கேற்கத் தயாராகிவருகின்றனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சக்திவேல் கூறுகையில், டி ஷர்ட்டுகள், பெண்களுக்கான உள்ளாடைகள், ஆகிய ஆடைகளில் திருப்பூர்ஏற்றுமதியாளர்கள் கை தேர்ந்தவர்கள்.
இவர்கள் கூடுதல் ஏற்றுமதி ஆடைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யத் தயார் நிலையில் உள்ளனர். இதன் மூலம் ரூ. 200 முதல் ரூ. 250 கோடிரூபாய்க்கான ஆடைகளை ஏற்றுமதி செய்யவுள்ளனர்.
கோட்டா முறையிலான ஒதுக்கீடு இருப்பதால் கூடுதலான ஆடை ஏற்றுமதி வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு குறைவாகவே உள்ளது. தற்போது ஐரோப்பியநாடுகளுக்கு கூடுதலாக ஏற்றுமதி செய்யக் கிடைத்திருக்கும் வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வார்கள் என நம்புகிறேன் என்றார்.
ஐரோப்பிய யூனியனுக்கு ஏற்றுமதிக் கோட்டா நான்காவது பிரிவின் கீழ் ஒரு கோடியே 40 லட்சம் பீஸ்களும், 5வது பிரிவின் கீழ் 76 ஆயிரம் பீஸ்களும்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் இந்த ஏற்றுமதியைப் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் திருப்பூர் உள்ளது. எனவே திருப்பூர் மீண்டும் பரபரப்பானநகராமாக உருவாகி வருகிறது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications