தலைவரை எதிர்த்த காங். தொண்டருக்கு தர்ம அடி
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இளங்கோவனுக்கு எதிராக வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்தவருக்கு தர்மஅடி விழுந்தது. அவரது வேட்புமனுவைஇளங்கோவன், அவரிடமிருந்து பறித்து கிழித்தெறிந்தார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடக்கவுள்ளதால், அதற்கு வேட்மனுத் தாக்கல் செய்வதற்கு புதன்கிழமையே இறுதிநாள்.
தேர்தலில் இளங்கோவன் போட்டியிடுகிறார். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் பார்த்தசாரதி என்பவர்,வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக புதன்கிழமை மாலை கட்சி அலுவலகத்திற்கு வந்தார்.
இவரது வேட்புமனுவை வாங்குவதற்கு தேர்தல் அதிகாரி ஜமால் நசீம் அங்கு இல்லை. இதனால் தான் கொண்டு வந்த வேட்புமனுவை கட்சிஅலுவலகக் கதவில் ஒட்ட முயன்றார்.
இதற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் நடந்தது.
அப்போது அங்கு வந்த இளங்கோவன், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடந்து முடிந்த பின்தான் மாநிலத் தலைவர் தேதியும், அதற்கானவேட்புமனுத் தாக்கல் செய்யும் நாளும் அறிவிக்கப்படும் என்றார்.
அதற்குப் பார்த்தசாரதி, முட்டாள்களாக இருப்பதற்கு இது பெரியார் கட்சி அல்ல. ஜனநாயகம் உள்ள காங்கிரஸ் கட்சி என்றார். ஆத்திரமடைந்தஇளங்கோவன், பார்த்தசாரதி கையிலிருந்த வேட்புமனுவை வாங்கி கிழித்தெறிந்தார்.
இளங்கோவன் செயலைக் கண்டதும், கொதித்தெழுந்த அவரது ஆதரவாளர்கள், பார்த்தசாரதியை சராமரியாகத் தாக்கினர். அங்கிருந்த மற்றகாங்கிரஸார் பார்த்தசாரதியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவங்கள் நடந்து முடிந்தபின் தேர்தல் அதிகாரி ஜமால் கட்சி அலுவலகத்துக்கு வந்தார். அப்போது மீண்டும் அங்கு வந்த பார்த்தசாரதி, அவரிடம்வேட்புமனுவைக் கொடுத்தார்.
அதற்குப் பதிலளித்த அவர் டெல்லியிலிருந்து முறைப்படி அறிவிப்பு வந்ததும் வேட்புமனுவை பெற்றுக் கொள்வதாகக் கூறினார்.
இதைத்தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தன்னைக் கடுமையான வார்த்தைகளால் திட்டியதாகவும், சங்கர் என்பவர் தன்னை அடித்துசட்டையைக் கிழித்ததாகவும் காவல்நிலையத்தில் புகார் செய்தார் பார்த்தசாரதி.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications